முகமூடி சின்னையாவுக்கு மேலும் 3 நாள் எஸ்ஐடி காவல் – விசாரணை தீவிரம்

மங்களூர், செப்டம்பர்.3- தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்து புதைக்கப்பட்டனர் என்று பொய்யான புகார் கூறி கைது செய்யப்பட்ட முகமூடி நபர் சின்னையாவை மேலும் நான்கு நாட்கள் சிறப்பு குழு (எஸ்ஐடி) வசம் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. வரும் 6ம் தேதி இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்று
பெல்தங்கடி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. குறிப்பிடப்பட்டுள்ளது. சின்னையாவை விசாரிக்க ஏற்கனவே நீதிமன்றம் அளித்திருந்த 12 நாட்கள் அவகாசம் இன்றுடன் முடிவடைந்ததை முன்னிட்டு அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
நீதிபதியான விஜயானந்த.டி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். விசாரணை அதிகாரி எஸ்.பி.ஜிதேந்திர குமார்
அரசு வழக்கறிஞர் சட்ட சேவை ஆணையத்தின் இரு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் இவர் ஆதார் படுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்டு முகமூடி நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவரிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விபரம் மற்றும் ஏழு சாட்சிகளின் வாக்குமூலங்கள் மேலதிக விசாரணை நடத்தப்பட உள்ள விபரங்கள் ஆகியவற்றை நீதிபதி முன்பு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது.
சட்ட சேவை அதிகாரத்தின் வக்கீல்
சிறப்பு விசாரணை குழு விசாரணை குறித்து நீதிபதியிடம் ஆட்சேபம் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர் இந்த வழக்கு தொடர்பாக டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் சோதனைகள் மற்றும் விசாரணை நடத்தப்பட வேண்டி இருப்பதால் சின்னையாவை மேலும் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். வாத பிரதிவாதங்கள் அனைத்தையும் கேட்ட நீதிபதி இறுதியில் சின்னையாவை மேலும் 4 நாட்கள் வைத்து விசாரணை நடத்த சிறப்பு சாரணை குழுவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்