Home மாவட்டங்கள் பெங்களூர் முன்னுக்குப் பின் முரண் – கோவை சிறுமியின் தாயிடம் அடுக்கடுக்கான கேள்வி

முன்னுக்குப் பின் முரண் – கோவை சிறுமியின் தாயிடம் அடுக்கடுக்கான கேள்வி

கோவை: மே 25-
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கார்த்தி, மோகன்ராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுமியின் தாயின் செயல்பாடுகளிலும் சந்தேகம் எழுப்பப்படுகிறது. சம்பவத்தின்போது அவர் மதுபோதையில் இருந்தது, முன்னுக்கு பின் முரணான பேச்சுகள் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் தடுமாற்றத்துடன் பதில் அளித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை சிறுமியின் தாய் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “எனக்கே தெரியாமல் என் குழந்தையின் உடலை வாங்கிச் சென்று, என் சம்மதம் இல்லாமல் எரித்துள்ளனர். உடலை வாங்க என்னை அனுமதிக்கவில்லை. பிரேத பரிசோதனை முடிந்து உடலை ஒப்படைத்ததும் எனக்கு தெரியாது. உரிய தண்டனை கிடைத்த பிறகே உடலை வாங்குவேன் என்று தெரிவித்திருந்தேன். ஆனால், எனக்கே தெரியாமல் என் கணவரிடம் கையெழுத்து வாங்கி உடலை எடுத்துச் சென்றுள்ளனர்.
என் குழந்தையின் உடலை என் கண்ணில்கூட காட்டவில்லை. யார் மீது குற்றம் என கண்டுபிடிக்க குழந்தையின் உடல் இல்லை. மருத்துவமனையில் என் கணவரின் மனதை மாற்றி குழந்தையின் உடலை வாங்கிச் சென்றுள்ளனர். உடலை ஒப்படைத்ததில் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை நடந்துள்ளது. உடலை எரிப்பதில் ஏன் அவசரம் காட்டப்பட்டது. ஏற்கனவே அந்த குழந்தை நிறைய வலிகளை அனுபவித்துள்ளது. என் மீதும் தேவையற்ற வதந்திகளை பரப்புகின்றனர். வழக்கை திசைதிருப்புவதற்காக அவதூறு பரப்பப்படுகிறது. எனக்கு நிதி வேண்டாம், நீதி வேண்டும். கொலையாளிக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து இனி யாரும் இதுபோன்ற தவறு செய்யக் கூடாது. என் குழந்தை அணுஅணுவாக சித்தரவதை அனுபவித்து இறந்துள்ளது; அதேபோல் கொலையாளிகளுக்கும் தண்டனை கிடைக்க வேண்டும். தாயின் தெளிவற்ற பதில்கள் முதலமைச்சர் என்னிடம் பேசினார். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். நேரில் சந்திக்கிறேன் என கூறினார். கொலையாளி கார்த்திக்கு, அவன் இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணுக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். மகளை தேடும்போது அந்த பெண்ணும், மோகன்ராஜ் என்பரும் திசை திருப்பினார்கள்” செய்தியாளர்கள், “குழந்தை காணாமல் போனது உங்களுக்கு எப்போது தெரியும், உங்கள் பதில் முன்னுக்கு பின் முரணாக உள்ளது, 3 மணி நேரம் போதையில் இருந்தேன் என்கிறீர்கள், உங்கள் பேச்சில் தடுமாற்றம் இருக்கிறதே, உங்களின் தேவை என்ன என்பதை தெளிவாக சொல்லுங்கள்” என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பப்பட்டது. “என் மீது அவதூறு பரப்ப வேண்டாம். எல்லா வீடுகளிலும் பெண் குழந்தைகள் உள்ளனர். எங்களை போல குழந்தையை பறிகொடுத்தால் தான் வலி தெரியும்” என்று அவர் பதில் அளித்தார்.