
மும்பை: ஜூலை 21- மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரை விடுவித்து மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அரசுத் தரப்பு குற்றத்தை நிரூபிக்கத் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறி மும்பை ஐகோர்ட், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்துள்ளது. 2006ல் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 190+ மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2006ம் ஆண்டு மும்பை நகரில் ஒரு மிக மோசமான ரயில் குண்டுவெடிப்பு நடந்தது. நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் 190+ பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். இந்த குற்றம் தொடர்பான வழக்கு மும்பை ஐகோர்ட்டில் நடந்து வந்தது.
பயங்கரவாதத் தாக்குதல் நடந்து 19 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மும்பை ஐகோர்ட் நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது.
அரசுத் தரப்பு அளித்துள்ள சாட்சியங்கள் மட்டும் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப் போதுமானவை இல்லை என்றும் அரசுத் தரப்பு குற்றத்தை நிரூபிக்கத் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறி அனைவரையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.