Home மாவட்டங்கள் பெங்களூர் மெரினாவில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

மெரினாவில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

சென்னை: ஏப்ரல் 27-
மெரினா கடற்​கரை​யில் நிறுத்​தப்​பட்​டிருந்த கார் தீப்​பற்றி எரிந்த சம்​பவம், பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. சென்​னை​யில் மென்​பொறி​யாள​ராகப் பணிபுரிந்து வரும் ஸ்ரீநாத் என்​பவர், நேற்று அதி​காலை சூரிய உதயத்​தைக் காண்​ப​தற்​காகத் தனது காரில் மெரினா கடற்​கரைக்கு வந்​தார்.மெரினா சர்​வீஸ் சாலை​யில் காரை நிறுத்​தி​விட்டு கடற்​கரைக்​குச் சென்​றார். சிறிது நேரம் கழித்து அவர் மீண்​டும் காரை நோக்கி வந்​த​போது, எதிர்​பா​ராத வித​மாக கார் திடீரெனத் தீப்​பற்றி எரி​யத் தொடங்​கியது.கண்​ணிமைக்​கும் நேரத்​தில் தீ காரின் அனைத்​துப் பகு​தி​களுக்​கும் பரவிய​தால், அந்த இடமே கரும்​புகை மண்​டல​மாகக் காட்​சி​யளித்​தது. இதைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்த அங்​கிருந்த பொது​மக்​களும், நடைப்​ப​யிற்சி மேற்​கொண்​ட​வர்​களும் உடனடி​யாக காவல் துறை​யினருக்​கும், தீயணைப்​புத் துறைக்​கும் தகவல் அளித்​தனர்.தகவலின் பேரில், திரு​வல்​லிக்​கேணி தீயணைப்பு நிலைய வீரர்​கள் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்​து, தீயை அணைத்​தனர்.எனினும், இந்த விபத்​தில் கார் முற்​றி​லும் எரிந்து எலும்​புக்​கூ​டாக மாறியது.
அதிர்​ஷ்ட​வச​மாக கார் நிறுத்​தப்​பட்​டிருந்த போது தீ விபத்து ஏற்​பட்​ட​தால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்​கப்​பட்​டது. காரில் ஏற்​பட்ட மின் கசிவு காரண​மாகத் தீ விபத்து ஏற்​பட்​டதா அல்​லது வேறு ஏதேனும் காரணமா என்​பது குறித்​துக் காவல்​துறை​யினர் தீவிர விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.