
மாண்டி: ஜூலை 2
ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பின் போது பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 5 பேர் பலியாகினர்.
மாண்டி மாவட்டத்தில் மேகவெடிப்பின் போது கனமழை கொட்டியது. விடாது பெய்த மழை எதிரொலியாக, அங்கு பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மழையின் காரணமாக நிலச்சரிவும் ஏற்பட கர்சோக், படா, தல்வாரா உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 15 பேர் காணாமல் போயுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர், அவர்களை தேடி வருகின்றனர். கனமழையால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை சரி செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. கிராட்புர்-மணாலி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது. மின் விநியோகமும் தடைபட்டுள்ளது. சுற்றுலா தளங்கள் மூடப்பட, ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால், லார்ஜி,பண்டோஹ் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஆற்றின் கரையோரங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து விடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.