மேக வெடிப்பு நிலச்சரிவு 11 பேர் பலி

ஸ்ரீநகர்: ஆக. 30-
ஜம்மு காஷ்மீரில் இன்று மீண்டும் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது, இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கு மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை திடீரென பயங்கர மேக வெடிப்பு ஏற்பட்டு வானத்திலிருந்து அருவி போல் மழை கொட்டியது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று காலை ஏற்பட்ட மேக வெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். மேக வெடிப்பு திடீர் வெள்ளம் காரணமாக பலர் காணாமல் போயுள்ளதாகவும் ராம்பன் துணை ஆணையர் தெரிவித்தார்.
மேக வெடிப்பைத் தொடர்ந்து காணாமல் போனவர்களைத் தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேக வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல்
ரியாசியில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
ராம்பன் மாவட்டத்தில் மேக வெடிப்பு ஏற்பட்ட நிலையில், அருகிலுள்ள ரியாசி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரியாசி மாவட்டத்தின் மோஹோர் பகுதியில் உள்ள பதார் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு முற்றிலுமாக இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். குடும்பத்தைச் சேர்ந்த மேலும் பலர் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காதர் கிராமத்தில் உள்ள வீட்டின் உரிமையாளர் நசீர் அகமதுவின் மனைவி மற்றும் ஐந்து மகன்கள் இந்த நிலச்சரிவில் இறந்ததாகக் கூறப்படுகிறது.சமீபத்தில், ஜம்மு-காஷ்மீர் உட்பட வட இந்தியாவின் பல மாவட்டங்களிலும் பல மாநிலங்களிலும் பெய்த கனமழையால் மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் உயிர் மற்றும் சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி, ரியாசி மாவட்டத்தின் காத்ரா பகுதியில் உள்ள வைஷ்ணோ தேவி கோயில் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 41 பக்தர்கள் பல பலியானார்கள் மற்றும் பலர் காயமடைந்தனர்.
அதே நாளில், தோடாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். கடந்த 14 ஆம் தேதி, மச்சைல் மாதா கோயிலுக்குச் செல்லும் வழியில் சிசோட்டி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயினர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
உத்தரகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டதால் உயிர் இழப்பு ஏற்பட்டது. இடைவிடாத மழை காரணமாக ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளன, மேலும் கனமழை மக்களின் வாழ்க்கையை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.