இம்பால்: ஜனவரி 23 –
மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி பழங்குடியினத்தவர்கள் இடையே நிலம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக மோதல் நிலவுகிறது.
இந்நிலையில், மைதேயி இனத்தைச் சேர்ந்த சிங் என்பவரை, குகி இனத்தவர்கள் கடந்த புதன்கிழமை கடத்தி சென்றனர். அவரை நேற்று சுட்டுக் கொன்றனர். ஐக்கிய குகி தேசிய படையை (யுஎன்கேஏ) சேர்ந்தவர்கள் தான் சிங்கை கடத்தி சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. மத்திய அரசின் அமைதி ஒப்பந்தத்தில் இந்த அமைப்பு கையெழுத்திடவில்லை.
அவர்கள் தொடர்ந்து பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள்தான் சிங் மற்றும் அவரது மனைவியை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் சிங்கை மட்டும் சுட்டுக் கொன்று விட்டு மனைவியை விடுவித்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர்தான் மணிப்பூர் மாநில தினம் கொண்டாடப்பட்ட நிலையில், இந்த படுகொலை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.



















