சென்னை: ஜூலை 14-கன்னடத்து பைங்கிளி என்று கொண்டாடப்பட்ட சரோஜா தேவி இன்று தனது 87ஆவது வயதில் உடல்நல குறைவு காரணமாக பெங்களூருவில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திரைத்துறையினர் தங்களது இரங்கலை தெரிவித்துவரும் நிலையில் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சரோஜா தேவிக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.கர்நாடகாவில் பிறந்த அந்த மாநில திரைத்துறையில் நடிகையாக அறிமுகமான சரோஜா தேவிக்கு தங்க மலை ரகசியம் திரைப்படம் தமிழ் சினிமாவில் நல்ல வெளிச்சத்தை கொடுத்தது. சிவாஜி கணேசன் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்படி திரையுலகில் பல்வேறு சாதனைகள் படைத்த சரோஜாதேவி மறைவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

















