Home செய்திகள் உலக செய்திகள் ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 18 பேர் உயிரிழப்பு

ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் 18 பேர் உயிரிழப்பு

கீவ்: ஜூலை 3-
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று முன்​தினம் இரவு நடத்​திய ட்ரோன் தாக்​குதலில் 18 பேர் உயி​ரிழந்​தனர்.
ரஷ்​யா​வின் எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்​குதல் நடத்தி வந்​தது. இதன் காரண​மாக ரஷ்​யா​வில் கடந்த 4 ஆண்​டு​களில் இல்​லாத அளவுக்கு எரிபொருள் தட்​டுப்​பாட்டை ஏற்​படுத்​தி​யது. எனவே, உக்​ரைனுக்கு மிகப் பெரியள​வில் பதிலடி கொடுக்க ரஷ்யா முடிவு செய்​தது.
உக்​ரைன் மீது நேற்று முன்​தினம் இரவு 74 ஏவு​கணை​கள் மற்​றும் 496 ட்ரோன்​களை ரஷ்யா ஏவியது. இவை உக்​ரைனில் 30 இடங்களைத் தாக்​கின. இதில் பல அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் தீப்பற்றின. 20-க்​கும் மேற்​பட்ட கட்​டிடங்​கள் சேதமடைந்​தன. இந்த தாக்​குதலில் 18 பேர் உயி​ரிழந்​தனர், 90-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர்.
மீட்​புப் பணி​கள் தொடர்​வ​தால் உயி​ரிழப்பு எண்​ணிக்கை அதிகரிக்​கும் என கூறப்​படு​கிறது. ரஷ்​யா​வின் தாக்​குதலை முறியடிக்க பேட்​ரி​யாட் போன்ற வான் பாது​காப்பு ஏவுகணைகளைத் தரும்​படி நட்பு நாடு​களிடம் உக்​ரைன் வேண்டுகோள்​ விடுத்​துள்​ளது.