Home மாவட்டங்கள் பெங்களூர் எ.வ.வேலு வீடு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

எ.வ.வேலு வீடு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: ஜூன் 25-
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் சென்னை மற்றும் திருவண்ணாமலை இல்லங்களிலும், அவரது அலுவலகங்களிலும் அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டிருக்கின்றனர். இது எ.வ.வேலு மட்டுமல்லாது சில முன்னாள் அமைச்சர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சட்டமன்ற கூட்டத்தொடரில்தான் இந்த பிரச்சனை வெடிக்க தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் மாதம் வெறும் 500 பேர் மட்டுமே வந்து செல்லும் கோயிலுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்ட முந்தைய அரசு செலவு செய்திருக்கிறது என்று விமர்சித்திருந்தார்.
அந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாத்ரூம் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. ஆனால், மல்டி லெவல் கார் பார்க்கிங் என்கிற பெயரில் வீண் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்று விமர்சித்திருந்தார். இந்து சமய அறநிலையத்துறையுடன் மட்டும் இந்த குற்றச்சாட்டுகள் நின்றுவிடவில்லை. நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வனம் என பல்வேறு துறைகளில் 800க்கும் அதிகமான குற்றச்சாட்டுகளை திமுக எதிர்க்கொண்டிருக்கிறது. இதில் முக்கியமானதுதான் நெடுஞ்சாலைத்துறை. சவ்வூடு மண் கடந்த ஆட்சியில், சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை 4 வழி பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளுக்காக சவ்வூடு மண் எங்கிருந்து? எவ்வளவு எடுக்கப்பட்டது? என்பதில்தான் பிரச்சனை வெடித்திருக்கிறது. அதாவது, நெடுஞ்சாலை போடுவதற்காக திருத்தணியை சுற்றியிருக்கும் ஏரியிலிருந்து சவ்வூடு மண் எடுக்கப்பட்டது. குறிப்பாக பட்டாபிராமபுரம் ஏரியில் 5 அடி ஆழம் வரை மட்டுமே மண் எடுக்க அரசு அனுமதித்திருந்தது.