ராகுலுக்கு பாஜக வலியுறுத்தல்

புதுடெல்லி, ஜன. 22- பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு கூட்டத்தில் பேசும்போது, ”காங்கிரஸ் கட்சியில் தலித் மக்களுக்கு அதிகமான பிரதிநிதித்துவம் தேவை” என்றார். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் பரவியது. இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா கூறுகையில், ”எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி விவகாரங்களை எழுப்பும் போது மக்கள் தொகைக்கு ஏற்ப சாதி விகிதாச்சார பிரதிநிதித்துவம் தேவை என ராகுல் காந்தி பேசுகிறார். ராகுல் காந்தியின் கொள்கைக்கும், அவர் பேசுவதற்கும் உள்ள வேறுபாட்டை சரண்ஜித் சிங் சன்னி வெளிப்படுத்தியுள்ளார். பஞ்சாப்பில் எஸ்.சி. மக்கள் தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் கட்சியில் ராகுல் அமல்படுத்த வேண்டும்” என்றார்.