ராபர்ட் வதேரா மீது குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: ஜூலை 18 –
ஹரியானாவின் குருகிராம் நில விவகார வழக்கில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா (56). இவர் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த 2008 பிப்ரவரியில் ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் ரூ.7.50 கோடியில் 3.5 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கியது. இங்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு, அப்போதைய காங்கிரஸ் முதல்வர் பூபேந்திர சிங் ஹுடா அனுமதி வழங்கினார். இதன் காரணமாக, நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
அதன்​பிறகு, ராபர்ட் வதே​ரா​வின் ஸ்கைலைட் ஹாஸ்​பி​டா​லிட்​டி நிறுவனம், அந்த இடத்தில் அடுக்​கு​மாடி குடி​யிருப்பு கட்​டா​மல், டிஎல்​எஃப் நிறுவனத்​துக்கு ரூ.58 கோடிக்கு அந்த நிலத்தை விற்பனை செய்தது. கட்​டு​மான உரிமத்​தை​யும் அந்த நிறு​வனத்​துக்கு வழங்​கியது.
இந்த நில விற்​பனை​யில் பண மோசடி, முறை​கேடு​கள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அமலாக்​கத் துறை வழக்கு பதிவு செய்து விசா​ரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்​பாக ரார்ட் வதே​ரா​விடம் பலமுறை விசாரணை நடத்தப்பட்டது.
டெல்லி ரோஸ் அவென்யூ வளாக நீதி​மன்​றத்​தில் இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரு​கிறது. இந்த ​வழக்​கில், ராபர்ட் வதேரா மீது அமலாக்​கத் துறை சார்பில் சமீபத்தில் குற்​றப்பத்​திரிகை தாக்கல் செய்​யப்​பட்டுள்​ளது. மேலும், ராபர்ட் வதே​ரா​வுக்கு சொந்​த​மான ரூ.37.64 கோடி மதிப்பிலான 43 சொத்துகளும் முடக்​கப்​பட்டுள்​ளன.
இதுகுறித்து அமலாக்​கத் துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: குரு​கி​ராம் நில விற்​பனை மோசடியில் கறுப்​பு பணம் பயன்​படுத்தப்பட்டுள்ளது. அப்​போதைய காங்​கிரஸ் அரசு, ராபர்ட் வதே​ரா​வுக்கு சாதகமாக செயல்​பட்டிருப்​பது வெட்​ட​வெளிச்​ச​மாகி இருக்​கிறது. வதே​ரா பரிந்துரை செய்த​படி, ஹரியானாவில் பல ஏக்​கர் நிலத்தை டிஎல்​எஃப் நிறுவனத்​துக்கு முந்​தைய காங்​கிரஸ் அரசு ஒதுக் கியுள்​ளது. இதன்​மூலம் டிஎல்எஃப் நிறுவனம் ஆதா​யம் அடைந்துள்ளது.
டிஎல்​எஃப் மற்​றும் வதே​ரா​வின் ஸ்கைலைட் ஹாஸ்​பி​டா​லிட்டி நிறு​வனம் இடையே நடை​பெற்ற பண பரி​மாற்​றங்​கள் குறித்து தீவிர​மாக விசா​ரணை நடத்தி வரு​கிறோம். பண மோசடி, முறை​கேடு​கள் தொடர்​பாக பல்​வேறு முக்கிய ஆதா​ரங்​கள் கிடைத்​துள்​ளன. இவற்​றின் அடிப்​படை​யில் நீதிமன்றத்தில் குற்​றப் பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்டுள்​ளது.