Home மாவட்டங்கள் பெங்களூர் ரூ.100 கோடி நில பத்திரப் பதிவு ரத்து

ரூ.100 கோடி நில பத்திரப் பதிவு ரத்து

மதுரை: ஜூலை 16 –
பழநி​யில் ரூ.100 கோடி மதிப்​புள்ள கோயில் நிலம் தனி நபர்​கள் பெயரில் பத்​திரப் பதிவு செய்​ததை ரத்து செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.
பழநி தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்​குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள 1.35 ஏக்கர் நிலம் பழநி அடி​வாரத்​தில் உள்​ளது. இந்த நிலத்தை அறக்​கட்​டளை​யிடம் இருந்து வாங்கி இருப்​ப​தாக​வும், அந்த நிலத்தை தங்​கள் பெயருக்கு பத்​திரப் பதிவு செய்ய பழநி சார்​ப​தி​வாள​ருக்கு உத்​தர​விடக்​கோரி​யும் சேதுப​தி, வெள்​ளைத்​துரை ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத் தாக் கல் செய்​தனர்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிப​தி, பத்​திரம் பதிவுசெய்ய சார்​ப​தி​வாள​ருக்கு உத்​தர​விட்​டார். இதையடுத்து அந்த கோயில் நிலம் தனிநபர்​கள் பெயரில் பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்​பியது. பத்​திரப்​ப​தி​வில் மோசடி நடந்​திருப்​ப​தாகக் கூறி சார்​ப​தி​வாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்​யப்​பட்​டார்.
இந்​நிலை​யில் தனி நீதிப​தி​யின் உத்​தரவை ரத்து செய்​யக் கோரி மடத்​தின் தக்​கார் தரப்பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்வில் மேல்​முறை​யீடு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதில், கோயில் நிலம் தொடர்​பாக ஏற்​கெனவே தாக்​கல் செய்​யப்​பட்ட வழக்​கு, கடந்த 2024 ஆக.19 அன்று தள்​ளு​படி​யானது. இருப்​பினும், அந்த வழக்கு நிலு​வை​யில் இருப்​ப​தாக ஒரு தோற்​றத்தை உரு​வாக்கி நீதி​மன்​றத் தில் தவறான தகவல்​களை அளித்து பத்​திரப்​ப​திவு செய்ய உத்​தரவு பெற்​றுள்​ளனர்.
இந்த நிலத்​தின் சட்​டப்​பூர்​வ உரிமை மற்​றும் நிர்​வாகம் பழநி கோயில் செயல் அலு​வலரிடம்​தான் உள்​ளது. தக்​காரை எதிர் மனு​தா​ர​ராகக் கூட சேர்க்​காமல், அவரது தரப்பு வாதங்​களைக் கேட்​காமலேயே தனி நீதிபதி, பத்திரப் பதிவுக்கு அனு​மதி வழங்கி உள்​ளார். இந்த நிலப் பரி​மாற்​றம் தொடர்​பாக தக்​கா​ரால் தொடரப்​பட்ட மற்​றொரு வழக்கு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருப்​பதை சார்​ப​தி​வாளர் நீதி​மன்​றத்​தின் கவனத்​துக்கு கொண்டு செல்லத்தவறிவிட்​டார்.
பொது சொத்து மற்​றும் ஆன்​மிக மடத்​தின் பல கோடி ரூபாய் மதிப்​புள்ள சொத்​துகளை தனி நபர்​கள் அபகரிப்​ப​தைத் தடுக்​கும் பொருட்​டும், சட்​டம் மற்​றும் உண்​மைக்​குப் புறம்​பாக பிறப்​பிக்​கப்​பட்ட தனி நீதிப​தி​யின் உத்​தரவை முழு​மை​யாக ரத்து செய்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது.
இந்த மனுவை நீதிப​தி​கள் கார்த்​தி​கேயன், சக்​திவேல் அமர்வு நேற்று விசா​ரித்​தது. பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறியிருப்பதாவது:
பதிவு செய்​யப்​பட்​டுள்ள இடம் கோயில் நிர்​வாகத்​துக்​குச் சொந்​த​மானது என ஏற்​கெனவே தீர்ப்​பு​கள் உள்​ளன. தனி நீதிப​தி​யிடம் உரிய எதிர் தரப்​பினரைச் சேர்க்​காமல் உத்​தரவை பெற்​றுள்​ளனர். இது நீதி​மன்​றத்தை ஏமாற்றி பெறப்​பட்ட உத்​தர​வாகும். அந்த இடத்தை பத்​திரப்​ப​திவு செய்​யக் கூடாது எனக் கோயில் நிர்​வாகம் ஏற் கெனவே பதிவுத்​துறை​யிடம் தெரி​வித்​துள்​ளது.