
பொள்ளாச்சி: ஆக. 30-
பொள்ளாச்சி நகராட்சியில், இணைப்பு திட்ட சாலை அமைப்பதற்காக, 32 கோடி ரூபாய் மதிப்பிலான, 80 சென்ட் நிலத்தை, நகராட்சி நிர்வாகத்திடம் சாந்தா என்ற பெண் தானமாக வழங்கினார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சியில், 1968ம் ஆண்டு அபிவிருத்தி திட்டம் எண், 5ல், பொள்ளாச்சி – பல்லடம் ரோடு – சின்னாம்பாளையம் ரோட்டை இணைக்கும், 66அடி இணைப்புச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதை கடந்த, 2009ம் ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்பின், நிலம் கையகப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில், நகராட்சி கமிஷனர் கணேசன், சாந்தாவிடம் பேச்சு நடத்தி இணைப்புச் சாலைக்காக நிலம் வழங்க கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, 80 சென்ட் நிலத்தை தானமாக வழங் க சாந்தா முடிவு செய்தார். நேற்று, நகராட்சி கமிஷனர் கணேசன், நகராட்சி தலைவர் சியாமளா, துணை தலைவர் கவுதமன் ஆகியோரிடம் நிலத்தை தானமாக வழங்கினார். இந்த இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 32 கோடி ரூபாயாகும்.
இது குறித்து சாந்தா கூறியதாவது: பல்லடம் ரோட்டில், கணவரின் பூர்விக சொத்து உள்ள இடத்தில் மண்டபம் கட்டப்பட்டது. அங்கு ரோடு அமைக்க, நகராட்சி நிர்வாகம் கடந்த, 2019ம் ஆண்டு நிலம் கேட்டது. விருப்பம் இல்லை எனக்கூறினோம். இதனால், எங்களது சொத்து வரியை உயர்த்தியது.