மும்பை: ஜனவரி 27-
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ரகசிய தகவலின் அடிப்படையில் வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் சமீபத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில் கோழிப்பண்ணை என்ற பெயரில் மெஃபெட்ரோன் போதைப்பொருள் உற்பத்திக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வந்த ஓர் ஆய்வகத்தை கண்டுபிடித்தனர்.
அதில் நடத்திய சோதனையில் சுமார் ரூ.55 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போதைப் பொருள் உற்பத்தியாளர் உள்ளிட்ட 3 பேரை அதே இடத்திலும் போதைப் பொருள் வாங்க வந்த 2 பேரை மற்றொரு இடத்திலும் கைது செய்தனர்.















