புதுடில்லி : ஏப்ரல் 23 – உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டு இருந்த நிவாரணத்தால் எரிச்சலடைந்த நீதிபதிகள், அதை தாக்கல் செய்த வழக்கறிஞருக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
குடும்ப தகராறு தொடர்பான வழக்கில், நேஹா டோடி என்பவருக்கு மும்பை குடும்பநல நீதிமன்றம், 2019ல் வழங்கிய நிவாரணங்களுக்கு தடை விதிக்கக்கோரி, சந்தீப் டோடி என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 32ன் கீழ் நிவாரணம் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அரசியலமைப்பு தீர்வுகளுக்கான உரிமைக்கு அரசியலமைப்பின் 32வது சட்டப்பிரிவு உத்தரவாதம் அளிக்கிறது. தனிநபர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் அவற்றை உறுதி செய்ய அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் உரிமையை இந்த சட்டப்பிரிவு அளிக்கிறது.