வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் படுகொலை

டாக்கா, ஜனவரி 5- வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை தொடர்கிறது.


மேலும் ஒரு இந்து இளைஞர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இது அந்த நாட்டில் இந்துக்களுக்கு எதிரான மிகப்பெரிய பயங்கரவாதமாக உருவாகி உள்ளது.


வங்கதேசத்தில் 3 வாரங்களில் காட்டுமிராண்டித்தனமாக நடந்த 5 வது சம்பவம் இதுவாகும்.


வங்கதேசத்தின் ஜஷோர் மாவட்டத்தில் உள்ள கோபாலியின் பஜார் வார்டில் இன்று மாலையில் இந்த சம்பவம் நடந்தது. பலியானவர் 45 வயதான ராணா பிரதாப் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது பிரதாப் மார்க்கெட் பகுதியில் இருந்ததாகவும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் காவல்துறையினரும் நேரில் கண்ட சாட்சிகளும் தெரிவித்தனர்.
செய்தி தெரியவந்தவுடன், மணிராம்புரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான நிலைமை மோசமடைந்து வருகிறது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான படுகொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டுமென்று இந்தியா முழுவதும் கோரிக்கைகள் வலுத்து வருகிறது இது இரு நாடுகளுக்கு இடையே பெரும் பதட்டத்தை உருவாக்கி உள்ளது