டாக்கா, டிச. 27- வங்கதேசத்தில் முகமது யூனுஷ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்ததில் இருந்தே அந்த நாடு, நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக ஷேக் ஹசீனா குடும்பத்துடன் சேர்ந்து 5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஊழல் செய்துள்ளதாக முகமது யூனுஷ் தலைமையிலான அரசு ரஷ்யாவின் அரசு நிறுவனம் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ள நிலையில் ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. நமது நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. ஆனால் இந்த உறவு கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வந்தது. வங்கதேச வன்முறையை தொடர்ந்து நம் நாட்டுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்த அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ராஜினாமா தான் இதற்கு காரணம். தற்போது ஷேக் ஹசீனா நம் நாட்டில் உள்ள நிலையில் வங்கதேசத்தில், நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசு நம் நாட்டுடன் மோதலை தான் கடைப்பிடித்து வருகிறது. அங்கு இந்துக்கள், கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. எல்லையில் ட்ரோன் கண்காணிப்பு, நமது எதிரான பாகிஸ்தான், சீனாவுடன் நெருக்கம் காட்டுவது உள்ளிட்ட வேலைகளில் முகமது யூனுஷ் செயல்பட்டு வருகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த வங்கதேசத்தை தனி நாடாக உருவாக்க நம் ராணுவம் தான் பாகிஸ்தான் வீரர்களுடன் சண்டையிட்டு சரணடைய வைத்து மிகப்பெரிய அளவில் உதவி செய்தது. அதன்பிறகே 1971 ல் புதிய நாடாக வங்கதேசம் உருவானது. இந்த வரலாற்றை மறைப்பதிலும் முகமது யூனுஷ் அரசு உறுதியாக உள்ளது. இதனால் தான் சமீபத்தில் கூட விஜய் திவாஸ் (வங்கதேசம் உருவாக பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வென்ற தினம்) டிசம்பர் 16ல் கொண்டாடப்பட்டது. அப்போது பிரதமர் மோடி நம் நாட்டு வீரர்களின் போர், தியாகத்தை நினைவுக்கூர்ந்ததற்கு முகமது யூனுஷ் அரசில் இடம்பெற்றிருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படியா நம் நாட்டுடன் வங்கதேசம் மோதலை கடைப்பிடித்து வருகிறது. இதற்கு நம் நாடும் உரிய முறையில் வங்கதேசத்துக்கு தக்க பதிலடியை கொடுத்து வருகிறது. இதற்கிடையே தான் முகமது யூனுஷ் அரசு ரஷ்யா நாட்டு அரசு நிறுவனம் மீது 5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஊழல் புகாரை சுமர்த்தி உள்ளது. இதனால் ரஷ்யா கடும் கோபமடைந்து முகமது யூனுஷ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசை கடுமையாக சாடியுள்ளதோடு, நீதிமன்றத்தில் பார்த்து கொள்கிறோம் என்று சவால் விடுத்துள்ளது.
Home செய்திகள் உலக செய்திகள் வங்கதேசத்துக்கு சவால் விட்ட ரஷ்யா.. முகமது யூனுஷ்க்கு வரும் பெரும் சிக்கல்