வந்தே பாரத் ரயிலில் எழுந்த புகை: நடு வழியில் நிறுத்தம்

திண்டுக்கல்: ஜூலை 9-
திண்டுக்கல் அருகே திடீர் கோளாறு ஏற்பட்டதால் நடுவழியில் வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டது.திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இன்று காலை வழக்கம் போல் வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் திண்டுக்கல் அருகே வந்த போது திடீரென ஏ.சி.யில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இன்று காலை வழக்கம் போல் வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் திண்டுக்கல் அருகே வந்த போது திடீரென ஏ.சி.யில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.ஏ.சி.யில் இருந்து புகை கிளம்பியதால் வடமதுரை அருகே வேல்வார்கோட்டை என்ற இடத்தில் அரை மணி நேரம் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு கருதி பின்னர் ரயிலின் வேகத்தை அதன் ஒட்டுநர்கள் குறைத்து திருச்சிக்கு கொண்டு சென்றனர். அங்கு காத்திருக்கும் பொறியாளர்கள் மூலம் பிரச்னையை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.