வருமானம் ஈட்டிய அஜித்குமாரை இழந்ததால் ஆதரவற்று தவிக்கும் குடும்பம்

திருப்புவனம்: ஜூலை 2 வரு​மானம் ஈட்​டிய அஜித்​கு​மாரை இழந்​த​தால், அவரது குடும்​பம் ஆதர​வற்ற நிலை​யில் தவித்து வரு​கிறது. சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தைச் சேர்ந்​தவர் மால​தி. இவர் மதுரை மாவட்​டம் சோழ​வந்​தானைச் சேர்ந்த பால​குருவை திரு​மணம் செய்​தார். இவர்​களது மகன்​கள் அஜித்​கு​மார், நவீன்​கு​மார். 20 ஆண்​டு​களுக்கு முன்​னர் பால​குரு உயி​ரிழந்த நிலை​யில், தனது 2 குழந்​தைகளு​டன் மடப்​புரத்​துக்கு வந்த மால​தி, உறவினர்​கள் ஆதர​வுடன் வாடகை வீட்​டில் வசித்து வரு​கிறார்.
இவர் தென்னை தட்டி முடைந்​து, 2 மகன்​களை​யும் படிக்க வைத்​தார். 10-ம் வகுப்பு வரை படித்த அஜித்​கு​மார், பூக்​கடை​யில் வேலை பார்த்து வந்​தார். இவரது தம்பி நவீன்​கு​மார் பொறி​யியல் படிப்பு படித்​து​விட்​டு, வேலை இல்​லாமல் உள்​ளார். இதனால் அஜித்​கு​மார் வரு​மானத்​தில் குடும்​பம் நடந்து வந்​தது. 2 மாதங்​களுக்கு முன்​பு​தான் அஜித்​கு​மார் தனி​யார் நிறு​வனம் மூலம் தற்​காலிக காவலா​ளி​யாக மடப்​புரம் பத்​ர​காளி​யம்​மன் கோயி​லில் சேர்ந்​தார்.
தற்​போது விசா​ரணை என்ற பெயரில் போலீ​ஸாரின் கொடூர தாக்​குதலால் அவர் உயி​ரிழந்​து​விட்​டார். இதனால் அவரது குடும்​பத்​தினர் ஆதர​வின்றி தவித்து வரு​கின்​றனர். அஜித்​கு​மார் இறந்த நிலை​யில், அறநிலை​யத் துறை சார்​பில் கோயி​லில் நிரந்தர வேலை மற்​றும் நிவாரணத் தொகை தரு​வ​தாக அதி​காரி​கள் உறு​தி​யளித்​தனர். ஆனால், அதற்​கான நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்லை என்​பது அக்​குடும்​பத்தை மேலும் சோகப்​படுத்​தி​யுள்​ளது.
அஜித்​கு​மார் சகோ​தரர் நவீன்​கு​மார் கூறிய​தாவது: நான், எனது அண்​ணன் அஜித்​கு​மார் உட்பட 5 பேரை விசா​ரணைக்கு அழைத்து சென்​றனர். எங்​களை பல இடங்​களுக்கு அழைத்​துச் சென்று விசா​ரணை நடத்​தினர். என்​னை​யும் அடித்​தனர். 2 நாட்​களாக போலீ​ஸார் அஜித்​கு​மாரை தொடர்ந்து அடித்​த​தால் சோர்​வாக இருந்​தார். விசா​ரணைக்​காக எனது அண்​ணனை மட்​டும் மடப்​புரம் கோயிலுக்​குப் பின்​புறம் போலீ​ஸார் அழைத்​துச் சென்​றனர்.
அப்​போது அவர் நடந்​து​தான் சென்​றார். ஆனால் திரும்பி வரும்​போது, அவரை போலீ​ஸார் தூக்​கிக் கொண்டு வந்​தனர். இதைப் பார்த்த நான், எனது தாயார் மற்​றும் உறவினர்​கள் காவல் நிலை​யத்​துக்கு சென்​றோம். அங்கு எனது அண்​ணன் இறந்​து​விட்​ட​தாக கூறினர். இவ்​வாறு அவர் கூறி​னார்.
அஜித்​கு​மாரின் தாயார் மாலதி கூறும்​போது, “கோயி​லில் பணி​யில் சேர்ந்து 2 மாதங்​கள்​தான் ஆகிறது. ஊதி​யம்​கூட வாங்​காத நிலை​யில், எனது மகன் உயிர் பறி​போய் விட்​டது. இது​வரை அவன் மீது எந்த வழக்​கும் இல்​லை. உடல்​நலப் பாதிப்​பும் இல்​லை. இனி என்ன செய்​யப் போகிறோம் என்று தெரிய​வில்​லை” என்​றார்.இதற்கிடையே, ஆதர​வற்று தவிக்​கும் அவரது குடும்​பத்​துக்கு அரசு ஆதரவுக் கரம் நீட்ட வேண்​டுமென கோரிக்கை எழுந்​துள்​ளது. கடந்த 4 ஆண்​டு​களில் 24 காவல் நிலை​யம் மற்​றும் போலீஸ் விசா​ரணை மரணங்​கள் நடந்​துள்​ள​தாக எதிர்க்​கட்​சிகள் புகார் தெரி​வித்து வரு​கின்​றன. இதனால் இது​போன்ற மரணங்​களைத் தடுக்க முதல்​வர் கடுமை​யான நடவடிக்கை எடுக்க வேண்​டுமென பலரும் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.