
டெல்லி, ஜூலை 1- அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து தொடர்பாக புதிய கோணம் ஒன்றை அமெரிக்க வல்லுநர் முன் வைத்து உள்ளார். இந்த விமானத்தின் பிளாக் பாக்ஸ் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில் முற்றிலும் புதிய கோணம் ஒன்றை அவர் முன் வைத்துள்ளார்.
அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் மத்தியில், அமெரிக்க போக்குவரத்துத் துறையின் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரலும், விமானப் போக்குவரத்து வழக்கறிஞருமான மேரி ஷியாவோ இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அந்த போயிங் 787 விமானத்தில் சாப்ட்வேர் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம்,
சாப்ட்வேர் பிரச்சனை காரணமாக போதிய Lift.. அதாவது உயர்ந்து செல்லும் விசை கிடைக்காமல் போய் இருக்கலாம் என்று கூறி உள்ளார். AI 171 விபத்திற்கு மென்பொருள் செயலிழப்பு காரணமாக ? அமெரிக்க போக்குவரத்துத் துறையின் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரலும், தற்போது Motley Rice நிறுவனத்தில் விமானப் போக்குவரத்து வழக்கறிஞருமான மேரி ஷியாவோ, ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளானதற்கான காரணம் சாப்ட்வேர்தான் என்று அடித்து கூறி உள்ளார். போயிங் விமானங்களில் பலவற்றில் சாப்ட்வேர் பிரச்சனை இருக்கிறது. அந்த பிரச்சனை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றுள்ளார். கடந்த மே மாதம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே போயிங் 787 ட்ரீம்லைனர் விபத்துக்குள்ளானதில் 274 பேர் உயிரிழந்தனர்.