லண்டன், ஜூலை 12- லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் போட்டியை நடிகை ஜான்வி கபூர், அவரது ஆண் நண்பருடன் ரசித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக நடந்து வருகிறது. லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ‘நடப்பு சாம்பியன்’ ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் மோதினர். முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய அல்காரஸ், 2வது செட்டை 5-7 என போராடி இழந்தார். பின் எழுச்சி கண்ட அல்காரஸ், 3வது செட்டை 6-3 என தன்வசப்படுத்தினார்.




















