Home செய்திகள் உலக செய்திகள் வெப்பமடையும் கண்டமாக மாறிய ஐரோப்பா

வெப்பமடையும் கண்டமாக மாறிய ஐரோப்பா

ஐரோப்பா, ஏப்ரல் 30-கடுமையான வெப்ப அலைகள், காட்டு தீ போன்ற பல்வேறு காரணங்களால் ஐரோப்பா மிகவேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறி இருக்கிறது. வெப்பஅலைகள், காட்டு தீ மற்றும் காலநிலை மாற்றத்தால் சுருங்கி வரும் பனி பரப்பு போன்ற காரணங்களால் ஐரோப்பா கண்டம் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருவதாக ஐநா வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் வானிலை ஆய்வு மைய அமைப்பானது ஐரோப்பிய இடைக்கால வானிலை முன்னறிவிப்பு மையத்துடன் (ECMWF) இணைந்து தயாரித்த கூட்டு அறிக்கையின் வாயிலாக, அப்பிராந்தியத்தில் நிலவும் காலநிலை மாற்றத்தின் அவல நிலையைச் சித்தரிக்கும் ஆய்வு தகவல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. காலநிலை மாற்றம் தொடர்பான இந்த அறிக்கையானது, ஐரோப்பா-வை ‘மிக வேகமாக வெப்பமடையும் கண்டம்’ என குறிப்பிட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ஐரோப்பாவின் அனைத்து பகுதிகளும் சராசரிக்கும் அதிகமான வருடாந்திர வெப்பநிலையை எதிர்கொண்டதாக ஐநா வானிலை அமைப்பு கூறி இருக்கிறது.