
சென்னை: ஜனவரி 27-
ஒரு நாளை நாம் ஆரம்பிக்கும்போது, காலை உணவு ரொம்பவே முக்கியம். காலையில் நாம் என்ன உணவை எடுத்துக் கொள்கிறோமோ, அதைப் பொறுத்தே அன்றைய நாள் அமையும். இதற்கிடையே வெறும் வயிற்றில் நாம் நிச்சயம் எடுத்துக் கொள்ளவே கூடாத மூன்று உணவுகளை இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் பட்டியலிட்டுள்ளார். அன்றைய நாள் நாம் எந்தளவுக்கு ஆக்டிவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறோம் என்பதைக் காலை நேரமே தீர்மானிக்கிறது. நல்ல தூக்கத்தோடு காலையில் தெம்பாக எழுந்தால் அன்றைய நாள் முழுக்க நாம் சிறப்பாகவே இருக்கும். அதேபோல நாம் காலை வேளையில் அதிலும் வெறும் வயிற்றில் சாப்பிடும் உணவும் கூட உடலின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கம் செலுத்துகிறது.
காலை எழுந்த உடனேயே செல்போன் அல்லது லேப்டாப்பை பார்ப்பது உடலுக்கு ரொம்பவே கெடுதல் என்பது பெரும்பாலானோருக்குத் தெரியும். அதுபோலவே வெறும் வயிற்றில் நாம் தவிர்க்க வேண்டிய சில உணவுகளும் உள்ளன. வெறும் வயிற்றில் நாம் நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து அவர் முக்கியமான தகவல்களை டாக்டர் சுபம் வாத்ஸ்யா பகிர்ந்துள்ளார்.
வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாதவை காலை வெறும் வயிற்றில் காஃபின் பானங்கள், சிட்ரஸ் பானங்கள், ஹெவி ஸ்மூத்திகள் அல்லது பச்சைக் காய்கறி சாலட்கள் குடலை எரிச்சலடையச் செய்து செரிமானத்தைப் பாதிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். உணவுகளைத் தவிர்ப்பதை விட, அவற்றைச் சரியான வரிசையில் எடுத்துக்கொள்வதே முக்கியம் என்றும் டாக்டர் வாத்ஸ்யா விளக்கினார்.1. டீ, காபி அல்லது சிட்ரஸ் பானங்கள் வெறும் வயிற்றில் டீ, காபி அல்லது சிட்ரஸ் பானங்களைக் குடிப்பது தீங்கு விளைவிக்கும். நமது இரைப்பை சென்சிடிவ் ஆனது. அப்படியிருக்கும்போது காஃபின் மற்றும் அமிலம் நேரடியாக வயிற்றைப் பாதிக்கும். அசிடிட்டி, எரிச்சல், குமட்டலை ஏற்படுத்தும். தினசரி இதுபோல வெறும் வயிற்றில் டீ, காபி எடுத்துக் கொண்டால் அசிடிட்டி ரிப்ளக்ஸ் ஆபத்து அதிகரிக்கும். 2. வாழைப்பழம் அல்லது பால் கலந்த ஸ்மூத்திகள் வாழைப்பழம் அல்லது பால் கலந்த ஸ்மூத்திகள் உடலுக்கு நல்லது போல தோன்றினாலும், அவை செரிமானத்திற்குக் கடினமானவை. எனவே, வெறும் வயிற்றில் இதை எடுத்துக் கொண்டால் கேஸ் பிரச்சினை ஏற்படும். மேலும், வயிறு உப்பசம், மந்தமான உணர்வும் கூட ஏற்படும்.!
- பச்சைக் காய்கறி சாலட் காய்கறிகளுக்கு உடலுக்கு ரொம்பவே நல்லது என்றாலும் வெறும் வயிற்றில் அதைச் சாப்பிட வேண்டாம் என்கிறார் டாக்டர் வாத்ஸ்யா.! பச்சைக் காய்கறிகளில் நார்ச்சத்து (Insoluble Fibre) நிறைந்துள்ளது. வெறும் வயிற்றில் இந்த நார்ச்சத்து குடலுக்கு ஒரு அதிர்ச்சி ஏற்படுத்துமாம். எனவே, கால நேரங்களில் முதலில் சமைத்த உணவுகளைச் சாப்பிடுவதே சரியாக இருக்கும். அதன் பிறகு சாலட்களை சாப்பிடலாம் என்கிறார் டாக்டர் வாத்ஸ்யா! .
- டாக்டர் வாத்ஸ்யா மேலும், “இந்த 3 உணவுகளிலும் பிரச்சினை உணவில் அல்ல.. நேரம் மற்றும் எப்போது எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் உள்ளது. மென்மையான, சத்தான மற்றும் எளிதில் செரிக்கும் உணவைக் காலையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதுவே சரியானதாக இருக்கும்” என்றார். இது சாதாரணச் செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உடலில் எதாவது சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக அருகே உள்ள மருத்துவரை அணுகவும்!
















