மும்பை: ஜூலை 9 –
இந்தியாவில் பிரபல முதலீட்டாளராக இருப்பவர்கள் ஜுன்ஜுன்வாலா குடும்பத்தினர். இவர்கள் பல நிறுவனங்களில் சரியான நேரத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பார்த்தவர்கள். அப்படித் தான் அவர்கள் டைட்டன் நிறுவனத்திலும் முதலீடு செய்து நல்ல லாபம் பார்த்திருந்தார்கள். ஆனால், திங்கள்கிழமை டைட்டன் மதிப்பு சரிந்த நிலையில், இதனால் அவர்களுக்கு ரூ.900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். பங்குச்சந்தை என்பது அதிக ரிஸ்க் மற்றும் அதிக லாபம் தரும் துறையாகும். இங்கு ஈஸியாக லாபத்தையும் சம்பாதிக்கலாம் நஷ்டத்தையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கலாம். சின்ன விஷயம் தப்பாகப் போனாலும் கூட பெரிய இழப்பைச் சந்திக்க வேண்டி இருக்கும். அந்தளவுக்கு ரிஸ்க் அதிகம் இருக்கும் முதலீடுகளாகவே பங்குச்சந்தை பார்க்கப்படுகிறது. ஜுன்ஜுன்வாலா குடும்பத்தினர் நேற்று 30 நிமிடங்களில் மட்டும் 900 கோடி ரூபாய் இழந்துள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா? இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.சரிந்த பங்கின் மதிப்பு ரகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைந்துவிட்ட போதிலும் இப்போதும் டைட்டன் கம்பெனியின் 5.15% பங்குகள் ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் இருக்கிறது. டைட்டன் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு முடிவுகள் சமீபத்தில் வெளியானது.இருப்பினும், மார்கெட் எதிர்பார்ப்புகளை டைட்டன் முடிவுகள் பூர்த்தி செய்யவில்லை. இதனால் திங்கள்கிழமை தொடக்கம் முதலே டைட்டன் பங்குகள் சரிய ஆரம்பித்தது. 90,000 கோடி ரூபாய் திங்களன்று ரூ.15,989 கோடியாக மதிப்பிடப்பட்ட ரேகா ஜுன்ஜுன்வாலாவின் பங்கு மதிப்பு வெறும் 30 நிமிடங்களில் கிட்டதட்ட 900 கோடி வரை குறைந்தது. டைட்டன் முடிவுகள் நல்ல முறையில் இருந்திருந்தால் லாபம் அதிகரித்திருக்கும். ஆனால், மார்கெட் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாததால் அதன் பங்கின் மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ளது. இதுவே ஜுன்ஜுன்வாலாவுக்கு இழப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.















