Home செய்திகள் உலக செய்திகள் வெள்ளப் பெருக்கு முன்னெச்சரிக்கை: நேபாள குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு

வெள்ளப் பெருக்கு முன்னெச்சரிக்கை: நேபாள குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு

சீனா, ஆகஸ்ட் 28- சீனா​வின் திபெத் பகு​தி​யில் இருந்தே நேபாளத்​துக்​குள் வெள்​ளம் புகுந்​திருக்​கிறது. இதுகுறித்து சீன அரசு முன்​கூட்​டியே தகவல் தெரிவிக்​க​வில்லை என்று நேபாள அரசு வட்​டாரங்​கள் குற்றம்சாட்டி உள்​ளன. எனினும் நேபாள அரசு சார்​பில் அதிகாரப்பூர்​வ​மாக சீனா மீது புகார் தெரிவிக்​கப்​பட​வில்​லை. இதுகுறித்து நேபாளத்​தில் செயல்​படும் சீன தூதரகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வெள்​ளப்​பெருக்கு குறித்து நேபாள அரசுக்கு சீனா முன்​கூட்​டிய தகவல் தெரிவிக்​க​வில்லை என்று கூறப்​படு​வது பொய் செய்​தி​யாகும். திபெத் பகு​தி​யில் கட்​டப்​படும் அணை உடைந்து நேபாளத்​தில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டிருக்​கிறது என்று கூறப்​படு​வதும் தவறான தகவல். நேபாள எல்​லைக்கு உட்​பட்ட பகு​தி​யில் உள்ள சிகரத்​தில் பனிமலை உடைந்​திருக்​கிறது. இதற்கு நிலநடுக்​கம் அல்​லது நிலச்​சரிவு காரண​மாக இருக்​கலாம். இந்த துயர​மான நேரத்​தில் குற்​றச்​சாட்​டு​களைத்​ தவிர்த்​து நிவாரண பணி​களில்​ கவனம்​ செலுத்​த வேண்​டும்​. இவ்​வாறு சீன தூதரகம்​ தெரிவித்துள்ளது.