பெங்களூரு, நவ. 27: வீட்டு வேலை செய்து கொண்டிருந்த வீட்டில் துரோகம் செய்து திருடிய பெண்ணை ஹுளிமாவு போலீசார் கைது செய்து, 7 லட்சம் மதிப்பிலான
123 கிராம் தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் சோமவார்பேட்டையைச் சேர்ந்த ருக்மணி கே. (31) ஆவார். அவர், ஹூளிமாவிலுள்ள ஹிராநந்தினி அபார்ட்மென்ட் அக்ஷயா நகரில் உள்ள ஒரு டாக்டரின் குடியிருப்பில் வீட்டுப் பணியாளராக இருந்தார்.
கடந்த நவ. 2ல், வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருடு போனதை பார்த்து, வேலை பார்த்துக் கொண்டிருந்த வீட்டுக்காரர், சந்தேகம் அடைந்து, புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்து, ஹூளிமாவு காவல் ஆய்வாளர் குமாரசாமி மற்றும் அவரது ஊழியர்கள், மர்மநபரை பிடித்து விசாரித்ததில், திருடியதை ஒப்புக்கொண்டார்.திருடப்பட்ட தங்க நகைகளை தங்கும் அறையின் படுக்கைக்கு அடியில் வைத்து, பேட்டராயனபுரம் மற்றும் மைசூரில் உள்ள அடகுக் கடைகளில் விற்றதாக அவர் கூறினார்.பேட்டராயனபுரம் அடகு கடையில் விற்கப்பட்ட 11 கிராம் தங்க நகைகளும், கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த 93 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.அசோகா தெருவில் உள்ள அடகு கடையில் விற்பனை செய்யப்பட்ட 19 கிராம் தங்க நகைகள் உள்பட 123 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா தெரிவித்தார்.