ஸ்ரீரங்கம் தை தேர் உற்சவம்: தங்க கருட வாகனத்தில் சேவைசாதித்த நம்பெருமாள்

திருச்சி: ஜனவரி 27-
ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோ-யி​லில் பூப​தித் திரு​நாள் எனப்​படும் தைத் தேர் உற்​சவம் கடந்த 23-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.
உற்​சவத்​தின் 4-ம் நாளில் வீரேஸ்​வரம் கருட மண்​டபத்​தில் தங்க கருட வாக​னத்​தில் நம்​பெரு​மாள் எழுந்​தருளி சேவை சாதிப்​பது வழக்​கம்.
இதையொட்டி நேற்று அதி​காலை கண்​ணாடி அறை​யில் இருந்து புறப்​பட்ட நம்​பெரு​மாள் வாகன மண்​டபம் சென்​றடைந்​தார்.
அங்​கிருந்து இரட்டை பிரபை வாக​னத்​தில் உள்​வீ​தி​களில் உலா வந்​தார். பின்​னர் வாகன மண்​டபம் சென்​றடைந்து பல்​லக்​கில் எழுந்​தருளி​னார்.நண்​பகல் வீரேஸ்​வரம் கருடமண்​டபம் செல்ல புறப்​பட்​ட​போது சாரல் மழை பெய்​தது. இதனால் வீரேஸ்​வரம் கருட மண்​டபத்​துக்​குச் செல்​லாமல், ரங்க விலாச மண்​டபத்​தில் ரத்​தின கிரீடம் உள்​ளிட்ட திரு​வாபரணங்​களு​டன் தங்க கருட வாக​னத்​தில் நம்​பெரு​மாள் எழுந்​தருளி​னார்.
தொடர்ந்​து, உத்​திர வீதி​களில் உலா வந்த நம்​பெரு​மாள் இரவு கண்​ணாடி அறையைச் சென்​றடைந்​தார்.வரும் 29-ம் தேதி நெல் அளவைக் கண்​டருளுதல், 30-ம் தேதி மாலை குதிரை வாக​னத்​தில் நம்​பெரு​மாள் வையாளி கண்​டருளுதல் நிகழ்ச்​சிகளும், 31-ம் தேதி காலை தேரோட்​ட​மும் நடை​பெறுகிறது.