Home செய்திகள் உலக செய்திகள் 100 மணி நேரத்துக்கு பின் மீட்பு

100 மணி நேரத்துக்கு பின் மீட்பு

கராகஸ், ஜூலை 3- வெனிசுலா நாட்டில் கடந்த வாரம் அடுத்​தடுத்து ஏற்பட்ட சக்​தி​வாய்ந்த பூகம்​பங்​களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3,000-த்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில், அங்கு இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவரை சுமார் 8 நாட்களுக்குப் பிறகு, மீட்புக் குழுவினர் 100 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டுள்ளனர். தென் ​அமெரிக்க கண்​டத்​தில் வெனிசுலா அமைந்​துள்​ளது. அந்த நாட்​டின் யாராகுய் மாகாணம், சான்​பெலிப் நகரில் கடந்த 24-ம் தேதி மாலை 6 மணி அளவில் (இந்​திய நேரப்​படி வியாழக்​கிழமை அதிகாலை 3.35 மணி) சக்​தி​வாய்ந்த பூகம்​பம் ஏற்​பட்​டது. இது ரிக்டர் அலகில் 7.2 ஆகப் பதி​வானது. அடுத்த 40 விநாடிகளில் யுமரே நகரில் 2-வது மிகப்​பெரிய பூகம்​பம் ஏற்​பட்​டது. இது ரிக்​டர் அலகில் 7.5 ஆகப் பதி​வானது. முதல் பூகம்​பம் ஏற்​பட்ட சான் பெலிப் நகரில் இருந்து 16 கி.மீ. தொலை​வில் யுமரே நகர் அமைந்துள்​ளது. பூகம்​பம் காரணமாக அந்த நாட்டில் பல்வேறு நகரங்களில் உள்ள மக்களின் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. இதன் இடிபாடுகளில் சிக்கி சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 10,000 பேர் மாயமாகி உள்ளனர்.