Home விளையாட்டு 11 மணி நேரம் கடலில் நீந்தி சாதனை படைத்த தம்பதி

11 மணி நேரம் கடலில் நீந்தி சாதனை படைத்த தம்பதி

இராமநாதபுரம், மே 7- இலங்கையின் தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே கடலில் நீந்தி பெங்களூரு தம்பதி சாதனை படைத்துள்ளனர். பெங்களூருவை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவன தம்பதினர் டேனிசன் மற்றும் விருஷாலி, இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி சாதனை படைப்பதற்காக ராமேஸ்வரம் வந்தனர்.
இலங்கை தலைமன்னாரில் இருந்து அதிகாலை 4:30 மணிக்கு டேனிசன் மற்றும் விருஷாலி நீந்த தொடங்கினர். இருவரும் பிற்பகல் 3:15 மணியளவில் அரிச்சல்முனை(Arichal Munai) சேர்ந்தனர்.
இவர்கள் 28 கி.மீ தூர கடல் பகுதியை 11 மணி நேரம் 15 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்து உள்ளனர். தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே நீந்தி சாதனை படைத்த முதல் தம்பதி என பாராட்டை பெற்றனர்.மேலும், தனுஷ்கோடி பகுதியில் பலத்த காற்று வீசியதுடன் கடல் சீற்றமாக மற்றும் நீரோட்டமும் அதிகமாக இருந்தது. எங்களால் வேகமாக நீந்த முடியவில்லை திட்டமிட்டதை விட ஒரு மணி நேரத்திற்கு தாமதமாக நீந்த முடிந்தது என்று தம்பதினர் கூறினார்கள்.