12 தொகுதிகள் பட்டியலுடன் கமல்

சென்னை: ஜனவரி 24-
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் ‘டார்ச்லைட்’ சின்னத்தில் போட்டியிட, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திட்டவட்டமாக இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் கட்சிக்கு அதிக வாக்கு வங்கி இருக்கும் 12 தொகுதிகளின் பட்டியலையும் அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கொடுப்பார் என சொல்லப்படுகிறது.
சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் டார்ச்லைட் சின்னத்தில் போட்டி என்பது குறித்தும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்படும் என தெரிகிறது. மக்கள் நீதி மய்யம் 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் சுமார் 8 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் இருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன் தினம் அவருக்கு 234 தொகுதிகளிலும் பொது சின்னமான டார்ச்லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது.