15 வயது சிறுமி மீட்பு

பிரயாக்ராஜ்: ஜூலை 1 – மதம் மாற்றி தீவிர​வாதச் செயல்​களில் ஈடு​படுத்த உத்​தரபிரதேசத்​திலிருந்து கடத்தி வரப்​பட்ட 15 வயது சிறுமியை போலீ​ஸார் மீட்​டுள்​ளனர். இதுகுறித்து உ.பி. போலீஸ் துணை கமிஷனர் குல்​தீப் சிங் குணாவத் கூறிய​தாவது: உத்​தரபிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜ் மாவட்​டம் பூல்​பூர் பகு​தி​யைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒரு​வரை கடந்த மே 8-ம் தேதி 19 வயதான தர்க்​சனா பானு என்​பவர் கேரளாவுக்கு கடத்​திச் சென்​றுள்​ளார்.
மதமாற்​றம் செய்​ய​வும், தீவிர​வாதச் செயல்​களில் ஈடு​பட​வும் அவரைக் கடத்​திச் சென்​ற​தாகத் தெரி​கிறது. ஆனால் அந்த சிறுமி, பானு​விட​மிருந்து தப்​பித்து திருச்​சூர் ரயில் நிலை​யத்​துக்கு வந்து போலீ​ஸாரிடம் தகவல் தெரி​வித்து அங்​கிருந்து தனது தாய்க்கு போன் செய்​துள்​ளார்.
இதைத் தொடர்ந்து பிர​யாக்​ராஜ் போலீ​ஸார் அங்கு சென்று சிறுமியை மீட்​டனர். மேலும் பானு, அவரது கூட்​டாளி முகமது கைஃப் ஆகிய 2 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். சிறுமி​யின் தாய் கொடுத்த புகாரின் பேரில் தற்​போது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.
சிறுமி​யின் தாய் தற்​போது கொலை மிரட்​டல் வரு​வ​தாக புகார் செய்​துள்​ளார். சிறுமியை, பானு டெல்லி ரயில் மார்க்​க​மாக அழைத்​துச் சென்​றுள்​ளார். பின்​னர் சிறுமியை அவர்​கள் கேரளா​வுக்கு அழைத்​துச் சென்​றுள்​ளனர். முதலில் பணம் கொடுப்​பது போல கொடுத்து மதமாற்​றம் செய்​ய​வும், பின்​னர் தீவிர​வாதச் செயல்​களில் ஈடு​பட​வேண்​டும் என்றும் சிறுமிக்கு அவர்​கள் அழுத்​தம் கொடுத்​துள்​ளனர்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தா​ர்​.