
டெல்லி, ஜூலை 11- இந்தக் காலத்தில் நமக்குப் பல்வேறு விதமான உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்குச் சிகிச்சைக்கு நாம் பல வகையான மருந்துகளையும் எடுத்துக்கொள்கிறோம். இதற்கிடையே 17 வகையான மருந்துகளைப் பட்டியலிட்டுள்ள மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்த மருந்துகளை உடனடியாகக் கழிப்பறையில் வீசிவிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
நம்மில் பெரும்பாலானோர் வீட்டில் வைத்திருக்கும் மாத்திரைகள் காலாவதியான பிறகு அதைத் தூக்கித் தான் எரிவோம். காலாவதியான பிறகு எதாவது பொருளை எடுத்துக்கொண்டால் அது ஆபத்து என்பதால் மாத்திரைகள் நாம் தூக்கி எரிவோம்.. ஆனால், வீட்டில் காலாவதியான மருந்துகளைத் தூக்கி எறிவதற்கு முன் இருமுறை யோசியுங்கள். ஏனென்றால் காலாவதியான மாத்திரைகளைத் தூக்கி எரிவதும் கூட ஆபத்தாக முடியுமாம். பரிந்துரை இது தொடர்பாக மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளது. 17 மருந்துகளைப் பட்டியலிட்டுள்ள சிடிஎஸ்சிஓ அமைப்பு, இந்த மாத்திரைகள் காலாவதியான உடன் குப்பைகளில் அல்லது வெளியே தூக்கி எரியக்கூடாது என்றும் கழிப்பறையில் போட்டு ஃபளஷ் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 மருந்துகள் என்ன! இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான மருந்துகள் வலி, பதற்றம் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படும் மாத்திரைகள் ஆகும்.
மேலும், இதர சிகிச்சைகளுக்குப் பயன்படும் ஓபியாய்டு மாத்திரைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஃபென்டானைல் (Fentanyl), ஃபென்டானைல் சிட்ரேட் (Fentanyl Citrate), டையாசெபம் (Diazepam), புப்ரெனோர்பைன் (Buprenorphine), புப்ரெனோர்பைன் ஹைட்ரோகுளோரைடு (Buprenorphine Hydrochloride) ஆகியவை அந்த லிஸ்டில் உள்ளது.
மேலும், மார்பின் சல்பேட் (Morphine Sulfate), மெத்தடோன் ஹைட்ரோகுளோரைடு (Methadone Hydrochloride), ஹைட்ரோமார்போன் ஹைட்ரோகுளோரைடு (Hydromorphone Hydrochloride), ஹைட்ரோகோடோன் பிடார்ட்ரேட் (Hydrocodone Bitartrate), டேபென்டடோல் (Tapentadol), ஆக்ஸிகோடோன் ஹைட்ரோகுளோரைடு (Oxycodone Hydrochloride) ஆகிய மாத்திரைகளும் இந்த பட்டியலில் உள்ளது.இது போக ஆக்ஸிகோடோன் (Oxycodone), ஆக்ஸிமார்போன் ஹைட்ரோகுளோரைடு (Oxymorphone Hydrochloride), சோடியம் ஆக்ஸிபேட் (Sodium Oxybate), டிராமடோல் (Tramadol), மெத்தில்ஃபெனிடேட் (Methylphenidate), மெபெரிடின் ஹைட்ரோகுளோரைடு (Meperidine Hydrochloride) ஆகிய மாத்திரைகள் இந்த லிஸ்டில் இருக்கிறது. கழிப்பறையில் கொட்ட வேண்டும்! இந்த மருந்துகள் காலாவதியான பிறகு அல்லது தேவையில்லாத போது, கழிப்பறையில் கொட்டுவது பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த மருந்துகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் ஆபத்தானதாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.