Home செய்திகள் தேசிய செய்திகள் 2 சகோதரிகள் தற்கொலை

2 சகோதரிகள் தற்கொலை

ஜோத்பூர், மே 18- கூட்டு பாலியல் வன்​கொடுமை, பிளாக் மெயில் ஆகிய​வற்​றால் விரக்​தி​யடைந்த 2 சகோ​தரி​கள் அடுத்​தடுத்து தற்கொலை செய்து கொண்​டனர். ராஜஸ்​தான் மாநிலம் ஜோத்​பூரைச் சேர்ந்த இளம் பெண் ஒரு​வருக்கு உள்​ளூரைச் சேர்ந்த மஹி​பால் என்​பவருடன் அறி​முகம் ஏற்​பட்​டுள்​ளது. அவர் அங்​குள்ள இ-மித்ரா சேவை மைய ஆபரேட்டராக பணிபுரிந்து வந்​தார். அவர் தன்​னுடன் பழகிய இளம்​ பெண்​ணின் ஆபாச வீடியோக்​களை ரகசி​ய​மாக பதிவு செய்​தார். பின்​னர் அந்த வீடியோவை காட்டி பிளாக் மெயில் செய்து பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார். அவர் மட்​டும் அல்​லாமல் அவரது நண்​பர்​களும் இளம் பெண்ணை மிரட்டி சுமார் 4 ஆண்டுகளாக கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளனர். அதோடு பிளாக் மெயில் செய்து பணமும் பறித்​துள்​ளனர். பல ஆண்​டு​களாக நீடித்த இந்த கொடுமையை பொறுத்​துக் கொள்ள முடி​யாமல் அந்த இளம்​பெண் கடந்த மார்ச் 20ம் தேதி தற்​கொலை செய்து கொண்​டார். இச்​சம்​பவம் குறித்து இளம் ​பெண்​ணின் சகோ​தரி போலீ​ஸில் கடந்த ஏப்​ரல் மாதம் 11ம் தேதி புகார் அளித்​தார்.