2-வது வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா

புதுடெல்லி, பிப். 12- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்​டத்​தில் கத்​துக்​குட்​டி​யான நமீபி​யா​வுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 7 மணிக்கு டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெறுகிறது. சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி முதல் ஆட்​டத்​தில் அமெரிக்​காவை 29 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யிருந்​தது. அந்த ஆட்​டத்​தில் முன்​னணி பேட்​ஸ்​மேன்​கள் அனை​வரும் ஏமாற்​றம் அளித்த நிலை​யில் சூர்யகு​மார் யாதவ் பொறுப்​புடன் விளை​யாடி 49 பந்துகளில் 84 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்கிய பங்கு வகித்​திருந்​தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல்​திறன் வெளிப்​படக்​கூடும். இது ஒரு​புறம் இருக்க தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா வயிற்று தொற்று மற்​றும் வைரஸ் காய்ச்​சல் காரண​மாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். நேற்று அவர், மருத்துவமனையில் இருந்து திரும்பினார். இதனால் இன்​றைய ஆட்​டத்​தில் அவர், களமிறங்​கு​வது சந்​தேகம்​தான். ஏனெனில் பாகிஸ்​தான் போட்​டியை கருத்​தில் கொண்டு அபிஷேக் சர்​மாவுக்கு போதிய ஓய்வு கொடுக்​கப்​படக்​கூடும். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்​சன் களமிறக்​கப்​படக்​கூடும். வாய்ப்பு கிடைக்​கும் பட்​சத்​தில் அவர், உயர்மட் செயல் திறனை வெளிப்​படுத்த முயற்​சிக்​கக்​கூடும். இஷான் கிஷன், ஹர்​திக் பாண்​டி​யா, ரிங்கு சிங், ஷிவம் துபே உள்​ளிட்​டோர் பொறுப்​புடன் விளையாடுவதில் கவனம் செலுத்​தக்​கூடும். இந்​திய அணி அடுத்​த​தாக வரும் 15-ம் தேதி பாகிஸ்தானுடன் மோத உள்​ளது. இதனால் அந்த போட்டிக்கு தயா​ராகும் வித​மாக இன்​றைய ஆட்​டத்தை இந்​திய அணி சிறந்த முறை​யில் பயன்​படுத்​திக் கொள்​ளக்​கூடும். பந்​து​வீச்​சில் முகமது சிராஜ், அர்​ஷ்தீப் சிங், அக்​சர் படேல் ஆகியோர் கடந்த ஆட்​டத்​தில் சிறப்​பாக செயல்பட்டு இருந்​தனர். இவர்​கள் நமீபியா அணியை குறைந்த ரன்​களில் கட்​டுப்​படுத்த முயற்​சிக்​கக்​கூடும்.இன்​றைய ஆட்​டத்​தில் வருண் சக்​ர​வர்த்​தி​யின் சுழல், நமீபியா அணி​யின் பேட்​ஸ்​மேன்​களுக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும். நமீபியா தனது முதல் ஆட்​டத்​தில் நெதர்​லாந்​திடம் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​திருந்​தது. அந்த அணி​யின் பேட்​டிங் வரிசை​யில் முதல் 6 இடத்​தில் களமிறங்​கும் வீரர்​களில் ஜேஜே ஸ்மித்தின் ஸ்டிரைக் மட்​டுமே 140 ஆக உள்​ளது. மற்ற 5 வீரர்களின் ஸ்டிரைக் ரேட் இன்​றைய கால டி20 பேட்​டிங்​ வரிசைக்​கு தகுந்த வகையில் இல்லை.