Home செய்திகள் தேசிய செய்திகள் 2014-க்குப் பிறகு பேரவைகளில் குறைந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள்

2014-க்குப் பிறகு பேரவைகளில் குறைந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள்

புதுடெல்லி: மே 9 –
கடந்த 2014-ம் ஆண்டு மத்​தி​யில் பாஜக தலை​மையி​லான கூட்​டணி ஆட்​சிக்கு வந்த பிறகு செல்​வாக்கை அதி​கரித்து வரு​கிறது. அதை சமாளிக்க முடி​யாமல், தேர்​தலின் போது வேட்​பாளர்​களைத் தேர்வு செய்​யும் போது எதிர்க்​கட்​சிகள் வேறு​வகை​யான மாற்​றங்​களைச் செய்து வரு​கிறது.
குறிப்​பாக மாநில சட்​டப்​பேர​வை​களில் முஸ்​லிம் எம்​எல்​ஏ.க்​களின் எண்​ணிக்கை 2013-ம் ஆண்டு 339 ஆக இருந்​தது. தற்​போது அது 282 ஆக குறைந்​துள்​ளது.
உத்தர பிரதேசத்​தில் சுமார் 25 சதவீத முஸ்​லிம்​கள் உள்ள சட்​டப்​பேர​வை​யின் மொத்த உறுப்​பினர்​கள் 403. ஆனால், தற்​போது 31 முஸ்​லிம் எம்​எல்​ஏ.க்​கள் மட்​டுமே உள்​ளனர். இதற்கு முன் உ.பி.​யில் 63 முஸ்​லிம் எம்​எல்​ஏ.க்​கள் இருந்​துள்​ளனர். இதே​போல் பிஹாரில் 19-ல் இருந்து 11, ராஜஸ்​தானில் 11-ல் இருந்து 6 ஆக முஸ்​லிம் எம்​எல்​ஏ.க்​களின் எண்​ணிக்கை குறைந்​துள்​ளது.அசாம், மேற்கு வங்க மாநிலங்​களில் 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் முறையே 8 மற்​றும் 9 முஸ்​லிம் வேட்​பாளர்​களை பாஜக நிறுத்​தி​யது. ஆனால், அசாமில், அனைத்து முஸ்​லிம் வேட்​பாளர்​களும் தோல்​வியடைந்​தனர். அதன்​பின் கட்​சி​யில் சிறு​பான்​மை​யினர் பிரிவையே பாஜக கலைத்து விட்​டது. இந்த முறை 2 மாநிலங்​களி​லும்​ ஆட்சி அமைத்த பாஜக, ஒரு முஸ்​லிம் வேட்​பாளரைக் கூட நிறுத்​த​வில்​லை. தேசிய அளவில் மணிப்​பூரைச் சேர்ந்த அச்​சப் உத்​தின் மற்​றும் திரிபு​ராவைச் சேர்ந்த தபஸ்​ஸுல் ஹுசைன் ஆகிய 2 பேர் மட்​டுமே பாஜக.​வில் முஸ்​லிம் எம்​எல்​ஏ.க்​களாக உள்​ளனர். முஸ்​லிம் எண்​ணிக்​கைக்​கும் மாநில சட்​டப்​பேர​வை​களில் அதன் உறுப்​பினர்​களுக்​கு​மான இடைவெளி மிக​வும் அதி​க​மாக உள்​ளது. மேற்கு வங்க மாநிலத்​தில் சுமார் 30 சதவீதம் இருந்​தும் சட்​டப்​பேர​வை​யில் 12.6 சதவீத முஸ்​லிம்​கள் மட்​டுமே உள்​ளனர்.