233 ஆண்டு பழமையான வால்மீகி ராமாயண பிரதி ஒப்படைப்பு

புதுடெல்லி: ​ஜனவரி 23-
வால்​மீகி ராமாயணத்​தின் 233 ஆண்​டு​கள் பழமையான அரிய சம்​ஸ்​கிருத கையெழுத்​துப் பிரதி அயோத்தியில் திறக்​கப்பட உள்ள ராம்​கதா அருங்காட்சியகத்துக்காக ஒப்​படைக்​கப்​பட்டு உள்​ளது.
வால்​மீகி ராமாயணத்​தின் கையெழுத்​துப் பிர​தி, டெல்லி சம்​ஸ்​கிருதப் பல்​கலைக்​கழகத்​தின் வசம் உள்​ளது. டெல்​லி​யில் குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் இது பாது​காத்து வைக்​கப்​பட்​டிருந்​தது. இந்​தக் கையெழுத்​துப் பிர​தி, ஆதி கவி​யாகக் கருதப்​படும் வால்​மீகி ராமாயணத்​துக்கு தத்​துவ தீபிகா உரை​யுடன் கூடியது. இது, தேவ​நாகரி எழுத்​துகளின் வடி​வில் சம்​ஸ்​கிருதத்​தில் எழுதப்​பட்​டது ஆகும்.இந்​தப் பிர​தி​யானது அயோத்​தி​யில் அமைக்​கப்​பட்டு வரும் ராம்கதா அருங்​காட்​சி​யகத்​துக்கு பரி​சாக அளிக்​கப்​பட்​டுள்​ளது.
இதை ராம்​கதா அருங்​காட்​சியக நிர்​வாகத்​துக்கு தலை​வ​ராக உள்ள அயோத்தி ஸ்ரீராம ஜென்​ம பூமி அறக்​கட்​டளை​யின் தலைவர் நிருபேந்​திர மிஸ்​ரா​விடம் சம்​ஸ்​கிருதப் பல்​கலைகழக துணைவேந்​தர் ஸ்ரீனி​வாசா வரகேடி நேற்று ஒப்​படைத்​தார்.இது குறித்து மத்​திய கலாச்​சா​ரத்​ துறை அமைச்​சகம் வெளியிட்டுள்ள செய்​திக் குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த நிகழ்​வு, ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க கலாச்​சா​ரப் பரி​மாற்றமாகும்.
இந்​தப் பிர​தி, மகேஸ்வர தீர்த்​தரின் செவ்​வியல் உரையுடன் கூடியது. இது விக்ரம சம்​வத் 1849 (கி.பி.1792) ஆம் ஆண்​டைச் சேர்ந்த வரலாற்று முக்​கி​யத்​து​வம் வாய்ந்த ஒரு படைப்​பாகும். இது ராமாயணத்​தின் அரி​தாகப் பாதுகாக்கப்பட்டுள்ள ஒரு நூலியல் மரபைப் பிரதிபலிக்​கிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.சம்​ஸ்​கிருத பல்​கலைக்​கழக துணைவேந்​தர் ஸ்ரீனி​வாசா வரகேடி கூறுகை​யில், இந்த கையெழுத்​துப் பிர​தி, இனி அயோத்​தி​யின் சர்வ​தேச ராம்​கதா அருங்​காட்​சி​யகத்​தில் நிரந்​தர​மாக இடம்​பெறும். இது பக்​தர்​கள் மற்​றும் பார்​வை​யாளர்​களுக்​கு ஆன்​மிக விருந்​தாக அமை​யும்​” என்​றார்​.