3-வது டெஸ்டில் இந்திய அணி மோதல்

லண்டன், ஜூலை 10- இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (10-ம் தேதி) தொடங்குகிறது.ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் லீட்ஸில் நடை பெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதன் மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. எட்ஜ்பாஸ்டன் போட்டியில் இங்கிலாந்து அணியின் பாஸ்பால் அணுகுமுறைக்கு இந்திய அணி பதிலடி கொடுத்து வெற்றி கண்டிருந்தது. பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள் வேட்டையாடிய ஷுப்மன் கில், 2-வது இன்னிங்ஸில் 161 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தார். ஒட்​டுமொத்​த​மாக 4 இன்​னிங்​ஸ்​களில் 585 ரன்​கள் வேட்​டை​யாடி உள்ள ஷுப்​மன் கில்​லிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும். தொடக்க வீரர்​களான யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல், ரிஷப் பந்த் ஆகியோ​ரும் சிறந்த பார்​மில் உள்​ளனர். கருண் நாயர் மட்​டுமே இது​வரை அரை சதத்தை கூட எட்ட முடி​யாமல் தடு​மாறி வரு​கிறார். அவரும் பார்​முக்கு திரும்​பும் பட்​சத்​தில் அணி​யின் பேட்​டிங் மேலும் வலுப்​பெறும். எட்​ஜ்​பாஸ்​டன் போட்​டி​யில் ஆல்​ர​வுண்​டர்​களாக ரவீந்​திர ஜடேஜா, வாஷிங்​டன் சுந்​தர் ஆகியோர் சிறந்த பங்​களிப்பை வழங்​கி​யிருந்​தனர். நித்​திஷ் குமார் ரெட்டி மட்​டுமே ஏமாற்​றம் அளித்​திருந்​தார். வேகப்​பந்து வீச்சை பொறுத்​தவரை​யில் ஆகாஷ் தீப் இரு இன்​னிங்​ஸிலும் கூட்​டாக 10 விக்​கெட்​களை வீழ்த்தி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தார்.