Home மாவட்டங்கள் பெங்களூர் 3.50 கோடி குற்றவியல் வழக்குகள் தேக்கம்

3.50 கோடி குற்றவியல் வழக்குகள் தேக்கம்

சேலம்: ஏப்ரல் 27 –
நாடு முழு​வதும்​ 3.50 கோடி குற்​ற​வியல்​ வழக்​கு​கள்​ தேக்​கம்​ அடைந்​துள்​ளன.
வி​சா​ரணை நீதி​மன்​றங்​களில்​ வழக்​கு​கள்​ தேக்​கமடை​யாமல்​ இருக்​க வழக்​கறிஞர்​களும்​ நீதி​மன்​ற​மும்​ அரசும்​ ஒருங்​கிணைந்​து செயல்​படு​வது அவசி​யம்​ என உச்​ச நீதி​மன்​ற நீதிப​தி எம்​.எம்​.சுந்​தரேஷ் வலியுறுத்தியுள்​ளார்​.
சேலம்​ அஸ்​தம்​பட்​டி​யில்​ உள்​ள ஒருங்​கிணைந்​த நீதி​மன்​ற வளாகத்​தில்​ ரூ.59.43 கோடியில்​ கட்​டப்​பட்​ட நீதி​மன்​ற கட்​டிடத் திறப்​பு விழா நேற்​று நடை​பெற்​றது. உச்​ச நீதி​மன்​ற நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ் தலை​மை வகித்​தார்​. சிறப்​பு விருந்​தினர்​களாக சென்​னை உயர்​ நீதி​மன்​ற தலை​மை நீதிப​தி எஸ்.ஏ.​ தர்​மா​தி​காரி, சென்​னை உயர்​ நீதி​மன்​ற நீதிப​தி​கள்​ சுரேஷ்கு​மார்​, இளந்​திரையன்​, ஜெயச்​சந்​திரன்​, குமரப்​பன்​ பங்கேற்றனர்​.
விழா​வில்​, உயர்​ நீதி​மன்​றதலை​மை நீதிப​தி தர்​மா​தி​காரி பேசும்போது, நீதித்​துறை​யும்​ அரசி​யலமைப்​பு சட்​டத்​தின்​ மூலம்​ மக்​களின்​ பாது​காப்​பு கேடய​மாகத்​ தி​கழ்​கிறது. நீதித்​துறை அதி​காரம்​ மற்​றும்​ செல்​வாக்​கு போன்​றவற்​றுக்​கு பணி​யாமல்​ நீதி​யை நிலை​நாட்​டி வரு​கிறது.
நீதி​யின்​ மாண்​பை போற்​றும்​ வகை​யில்​, நீதி பரி​பாலனம் அமைய வேண்​டும்​ என்​றார்​. புதி​ய நீதி​மன்​ற கட்​டிடத்​தை திறந்​து வைத்​து நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ் பேசி​ய​தாவது: நாடு முழு​வதும்​ 4.81 கோடி வழக்​கு​கள்​ தேங்​கி​யுள்​ளன.
அவற்​றில்​ 4.18 கோடி வழக்​கு​கள்​ மாவட்​ட நீதி​மன்​றங்​களில்​ உள்​ளன. இந்​த வழக்​கு​களில்​ குற்​ற​வியல்​ வழக்​கு​கள்​ மட்​டும்​ 3.50 கோடியாகும்.
குற்​ற​வியல்​ வழக்​கு​கள்​ குறைந்​திருக்​க வேண்​டும்​. உரிமை​யியல்​ வழக்​கு​கள்​ அதி​க​மாக இருக்​க வேண்​டும்​. குற்​ற​வியல்​ வழக்​கு​களில்​, 7 ஆண்​டு​கள்​ தண்​டனை வழங்​கக் ​கூடிய வழக்​கு​கள்​ எண்​ணிக்​கை மட்​டும்​ 2.50 கோடி.வி​சா​ரணை நீதி​மன்​றங்​களில்​ மட்​டும்​ 2.25 கோடி வழக்​கு​கள்​ தேங்​கி​யுள்​ளன. இதுகுறித்​து உச்​ச நீதி​மன்​ற தலை​மை நீதிப​தி​யிடம்​ தெரி​வித்​த​போது, கமிட்​டி அமைத்​து நடவடிக்​கை எடுக்​க அறி​வுறுத்​தி​னார்​.
தமிழகத்​தில்​ மாநில அரசு, வழக்​கறிஞர்​கள், நீதித்​துறை இணைந்​து கமிட்​டி அமைக்​கப்​பட்​டது. வழக்​கு​கள் தேக்​கமடை​யாமல்​ இருக்​க வழக்​கறிஞர்​களும்​ நீதி​மன்ற​மும் அரசும்​ ஒருங்​கிணைந்​து செயல்​படு​வது அவசியமாகும்​.