35 லட்சம் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை

பாட்னா, ஜூலை 16- பிஹாரில் நடை​பெற்று வரும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தம் (எஸ்​ஐஆர்) நடவடிக்​கை​யின் விளை​வாக 35 லட்சத்துக்​கும் மேற்​பட்​ட​வர்​களின் பெயர்​களை வாக்​காளர் பட்​டியலில் இருந்து தேர்​தல் ஆணை​யம் நீக்க உள்​ளது. இதுகுறித்து தேர்​தல் ஆணை​யம் கூறி​யுள்​ள​தாவது: பிஹார் மாநிலத்​தில் எஸ்​ஐஆர் பணி​கள் தீவிர​மாக மேற்​கொள்​ளப்​பட்டு வருகின்​றன. இது​வரை 6.6 கோடி வாக்​காளர்​கள் தங்​களது கணக்​கெடுப்பு படிவங்​களை சமர்ப்​பித்​துள்​ளனர். இது, மாநிலத்​தில் உள்ள மொத்த வாக்​காளர் எண்​ணிக்​கை​யில் 88.18 சதவீதம் ஆகும். ஜூலை 25 வரை வாக்​காளர்​கள் தங்​கள் படிவங்​களை சமர்ப்​பிக்க காலஅவ​காசம் உள்​ளது. அதன் பிறகு வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​படும். 1.59 சதவீதம் அதாவது 12.5 லட்​சம் வாக்​காளர்​கள் இறந்​து​விட்​டனர். இருப்​பினும், அவர்​களது பெயர்​கள் வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெற்​றுள்​ளது. மேலும், 2.2 சதவீதம் அதாவது 17.5 லட்​சம் வாக்​காளர்​கள் பிஹாரில் இருந்து நிரந்​தர​மாக வெளி​யேறி​விட்​டனர். எனவே, அவர்​கள் இனி பிஹார் மாநில தேர்​தல்​களில் வாக்​களிக்க தகு​தி​யற்​றவர்​களாகி விடு​கின்​றனர். மேலும், 0.73 சதவீதம் அதாவது சுமார் 5.5 லட்​சம் பேரின் பெயர்​கள் வாக்​காளர் பட்​டியலில் இரண்டு முறை பதிவு செய்​யப்​பட்​டிருப்​பது கண்டறியப்பட்டுள்​ளது. இவை அனைத்​தை​யும் கணக்​கிடும்​பட்​சத்​தில் பிஹார் வாக்​காளர் பட்​டியலில் இருந்து சுமார் 35.5 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்கப்படும். இது, மொத்த வாக்​காளர்​களில் 4.5 சதவீதத்​துக்​கும் அதி​க​மாகும்.இவ்​வாறு தேர்​தல் ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது. இந்த எஸ்​ஐஆர் கள ஆய்​வின்​போது நேபாளம், வங்​கதேசம், மியான்​மர் போன்ற நாடு​களைச் சேர்ந்த சில வெளி​நாட்​டினரும் பிஹார் வாக்​காளர்​களாக பதிவு செய்​திருப்​பதை தேர்​தல் ஆணை​யம் வெளிப்​படுத்​தி​யுள்​ளது. சரி​பார்ப்​பு​களுக்கு பிறகு இந்த பெயர்​களும் நீக்​கப்​படும் என்று ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது. இதனிடையே, பிஹார் மாநிலத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தம் மேற்​கொள்​ளும் தேர்​தல் ஆணை​யத்​தின் நடவடிக்​கையை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள வழக்கு ஜூலை 28-ம்​ தேதி வி​சா​ரணைக்​கு வரவுள்​ளது.