
சென்னை: அக்.13-
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தத்தெடுக்க உள்ளதாக தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு விஜய்க்கு சாதகமாக வந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் தத்தெடுக்கிறார். அவர்கள் குடும்பத்தினரின் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் விஜய் ஏற்கவிருக்கிறார்.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை. அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக விஜய் இருப்பார் என ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.