Home மாவட்டங்கள் பெங்களூர் 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் – முதல்வர் விஜய் பதில் மனு

5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்க வேண்டும் – முதல்வர் விஜய் பதில் மனு

சென்னை: ஆகஸ்ட் 28
தமிழகத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி முதல்வர் விஜய், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். இடைத்தேர்தல் நடத்த கூடாது என்ற உள்நோக்கத்துடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக விஜய் பதில் மனு தாக்கல் செய்து இருக்கிறார். எனவே 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க தனது மனுவில் முதல்வர் விஜய் கோரி உள்ளார்.
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. இந்த சூழலில் திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டதால் தொகுதியின் லட்சக்கணக்கான மக்கள், எம்.எல்.ஏ. இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி கிழக்கு தொகுதியில் 20 பேர் போட்டியிட்ட நிலையில், தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வாய்ப்பில்லை. மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 6 மாதங்களுக்குள் தேர்தல் ஆணையம், இடைத்தேர்தல் அறிவிக்க வேண்டும். எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம், இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி தாக்கல் செய்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் முதல்வர் விஜய் தனது பதில் மனுவில் வலியுறுத்தி உள்ளார்.