பெங்களூரு: ஆக. 16-
பெங்களூரு கே.ஆர். மார்க்கெட் அருகே உள்ள நாகர்த்தபேட்டையில் உள்ள ஒரு வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
மதன் (38), அவரது மனைவி சங்கீதா (33), மிதேஷ் (8), விஹான் (5) ஆகியோர் இந்த துயரச் சம்பவத்தில் உயிருடன் எரிந்து பலியானார்கள். மேலும் சுரேஷ் என்பவர் மாடியில் எரிந்து இறந்தார். பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தார். பின்னர், நிருபர்களிடம் பேசிய அவர், அதிகாலை 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறினார். போலீசாரும் தீயணைப்புப் படையினரும் தொடர்ந்து பல மணி நேரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். தரை தளத்தில் உள்ள குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர், மேல் தளங்களுக்கும் பரவியது. தீ விபத்து ஏற்பட்டவுடன் கட்டிடத்தில் இருந்த பெரும்பாலானோர் ஓடிவிட்டனர். இருப்பினும், ஒரு குடும்பம் மட்டுமே தீயில் சிக்கிக் கொண்டது. ஏற்கனவே இரண்டு உடல்கள் வெளியே எடுக்கப்பட்டுவிட்டன. மேல் தளம் தீ மற்றும் புகையால் முழுமையாக மூழ்கியுள்ளது, இதனால் உள்ளே நுழைய முடியவில்லை, எனவே உள்ளே சிக்கியவர்களைத் தேட முடியவில்லை. நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீயணைப்பு வீரர்கள், தடயவியல் ஆய்வக அதிகாரிகள் மற்றும் எங்கள் மீட்புக் குழுவினர் பணியாற்றி வருகின்றனர். மேலும் உடல்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர்.
கே.ஆர். மார்க்கெட் அருகே உள்ள நாகர்தபேட்டையில் உள்ள ஒரு வணிகக் கட்டிடத்தில் இன்று இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விஷயம் தெரிந்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் தொடர்ந்து பரபரப்பும் பதட்டமும் பீதியும் நிலவி வருகிறது
சம்பவ இடத்தை ஆய்வு செய்த பிறகு நிருபர்களிடம் பேசிய பெங்களூர் போலீஸ் கமிஷனர் தீ விபத்து ஏற்பட்டு குடோன் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது ஆனால் தீ விபத்திற்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணைக்கு பிறகு கூற முடியும் என்றார். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் மற்ற யாராவது சிக்கி இருக்கிறார்களா அவர்கள் பலியாகி இருக்கிறார்களா என்று இன்று மதியம் வரை தெரியவில்லை அதேசமயம் கட்டினத்தின் ஒரு அறை திறக்கப்படாமல் உள்ளது அது தீ விபத்து காரணமாக மிகவும் சூடான நிலையில் இருப்பதால் அதன் உள்ளே உடனடியாக செல்ல முடியவில்லை அந்த அறைக்கு சென்ற பிறகு அதில் யாராவது இருக்கிறார்களா என்று தெரிய வரும் என்பதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.













