Home மாவட்டங்கள் பெங்களூர் 6 பேர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு

6 பேர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு

விஜயபுரா: ஜூன் 22-
பீமா நதிக்கரையில் 6 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.
சாட்சன் அருகே இட்டிங்கிஹாள் கிராமத்தில் பதுங்கியிருந்த கொலையாளி மகேஷ் தளவாரை போலீசார் நேற்று சுற்றி வளைத்தனர். அப்போது அவன் போலீசார் மீது சரமாரியாகக் கற்களை வீசித் தாக்கினான். போலீசார் வானத்தை நோக்கிச் சுட்டும் அவன் அடங்காததால், இன்ஸ்பெக்டர் பரசுராம் தற்காப்பிற்காக அவனது காலில் சுட்டார். இதில் குண்டடிபட்டு வீழ்ந்த மகேஷ் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
கடந்த மே 29 அன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 பேரை கொலை செய்ய இவன் ரூ.15 லட்சம் சுபாரி வாங்கியது தெரியவந்தது. இந்த மோதலில் காயமடைந்த இரு காவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.