
பெங்களூர்: ஜூன் 22-
பெங்களூரு எலகஹங்கா பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, திடீரென ‘யு-டர்ன்’ எடுத்து திரும்ப முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மீது அந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு எலகஹங்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எலகஹங்கா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


















