Home விளையாட்டு 981 நாட்​களுக்​குப் பின்​ களமிறங்கிய நெய்மர் கண்ணீர்

981 நாட்​களுக்​குப் பின்​ களமிறங்கிய நெய்மர் கண்ணீர்

மியாமி, ஜூன் 26- ஸ்காட்லாந்துட​னான ஆட்​டத்​தில் நேற்று நீண்ட நாட்களுக்​குப் பிறகு களமிறங்​கி​னார் பிரேசில் வீரர் நெய்மர் ஜூனியர். 981 நாட்​களுக்​குப் பின்​னர் களமிறங்​கிய​தால் மைதானத்​திலேயே அவர் கண்​ணீர் விட்டு அழு​தார். மியாமி மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் ஸ்காட்​லாந்து அணியை 3-0 என்ற புள்ளி கணக்​கில் வீழ்த்தி பிரேசில் நாக்​-அவுட் சுற்​றுக்கு முன்​னேறியது. நேற்​றைய ஆட்​டத்​தின் 76-வது நிமிடத்​தில் மத்​தேயஸ் குன்​ஹாவுக்​குப் பதிலாக, நெய்​மர் ஜூனியர் களமிறக்​கப்​பட்​டார். அவரைப் பார்த்த பிரேசில் ரசிகர்​கள் ஆரவாரம் செய்தனர். ஆட்​டத்​தில் பிரேசில் வெற்றி பெற்​றதும் உணர்ச்​சிப் பெருக்​கால் மைதானத்​திலேயே நெய்மர் கண்​ணீர்விட்டு அழுதார். அவர் கடைசி​யாக 2023-ம் ஆண்டு அக்​டோபரில் தேசிய அணிக்​காக விளை​யாடி​யிருந்​தார். இந்​நிலை​யில், சுமார் 3 ஆண்டு காலம் (981 நாட்​கள்) கழித்து அவர் மைதானத்​தில் களம்​பு​குந்​தார். இதுகுறித்து அவர் கூறும்​போது, “என் வாழ்க்​கை​யின் மிக மகிழ்ச்சி​யான மற்​றும் உணர்ச்​சிகர​மான நாட்​களில் இது​வும் ஒன்று. இதை என்​னால் மறக்​க​முடி​யாது” என்​றார். மேலும், இந்த உலகக் கோப்​பை​யில் பங்​கேற்று விளை​யாடிய​தால் தொடர்ந்து நான்கு உலகக் கோப்​பைத் தொடர்​களில் (2014, 2018, 2022, 2026) விளை​யாடிய வீரர்​களின் பட்​டியலில் நெய்​மரும் இணைந்​துள்​ளார். 34 வயதாகும் நெய்மர், பிரேசில் அணிக்​காக இது​வரை 129 போட்​டிகளில் விளை​யாடி 79 கோல்​களு​டன், அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற வரலாற்​றுச் சாதனையைத் தன் வசம் வைத்​துள்​ளார்.