ராகுலுக்கு சம்மன்

லக்னோ : டிச.23- லோக்சபா தேர்தலின் போது பொருளாதார கணக்கெடுப்பு தரவுகளை வைத்து வர்க்க ரீதியாக வெறுப்பை பரப்ப முயன்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீது தொடரப்பட்ட வழக்கில், உத்தர பிரதேச நீதிமன்றம் அவர் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் லோக்சபா தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், பொருளாதார கணக்கெடுப்பில் உள்ள விபரங்களை வைத்து பேசினார்.
அப்போது, ‘விளிம்பு நிலை மக்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும், அவர்கள் வைத்திருக்கும் சொத்துக்களின் அளவு குறைவாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அதிக மக்கள் தொகை இருப்பவர்கள், அதிக சொத்துக்கள் கேட்பர்’ என கூறினார்.