வாஷிங்டன்:டிச. 26: உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘
உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில், அந்நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ‘ட்ரோன்’கள் வாயிலாக ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு, ரஷ்யாவிற்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆதரவு அளிப்போம். ஆயுதங்கள் அதிகமாக கொடுப்போம்’ என பைடன் உறுதி அளித்துள்ளார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலை கண்டிக்கிறேன். குளிர்காலத்தில் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில், மின்சாரம் துண்டித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நான் தெளிவாக சொல்கிறேன்.
உக்ரைன் மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ விரும்புகிறார்கள்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைன் வெற்றி பெறும் வரை அமெரிக்காவும், சர்வதேச சமூகமும் உக்ரைனுடன் தொடர்ந்து நிற்க வேண்டும். உக்ரைனுக்கு அதிகமான ஆயுதங்கள் வழங்குமாறு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். ரஷ்யாவின் படைகளுக்கு எதிராக, உக்ரைன் மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.