15 இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல் – நடுவானில் முறியடித்த இந்தியா

புதுடெல்லி,மே.8 –
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. எனவே இந்தியா மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தி பாகிஸ்தானின் முக்கிய பாதுகாப்பு அமைப்புகளை அழித்துள்ளது.
சண்டிகர், அவந்திபோரா, ஜலந்தர், லூதியானா, அமிர்தசரஸ், பதன்கோட், கபுர்தலா, நாலா, பலோடி, உத்தரலை, புஜ், ஜம்மு, ஸ்ரீநகர், ஆதம்பூர் மற்றும் பதிந்தா போன்ற இந்திய நகரங்களை பாகிஸ்தான் தாக்க முயன்றது. நேற்று இரவு பாகிஸ்தான் 15 இந்திய நகரங்களைத் தாக்க ட்ரோ ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை ஏவியது. எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் பாகிஸ்தானின் சீனாவில் தயாரிக்கப்பட்ட எச்கியூ -9 ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை இந்தியா துவம்சம் செய்து அழித்தது. இதன் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் இரண்டாம் நாள் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை விங் கமாண்டர் வ்யூமிகா சிங் விளக்கி கூறினார்.
நாங்கள் பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியுள்ளோம். மேற்கு மற்றும் வட இந்தியாவில் உள்ள நகரங்களை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் முயன்றது. பாகிஸ்தான் தாக்குதலை எஸ்15 -400 வான் பாதுகாப்பு மூலம் நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பையும் தாக்கி செயல் இழக்க வைத்துள்ளோம். இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலால் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு பிரிவுகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன.
பாகிஸ்தான் சீனாவிடமிருந்து ஹெச்.கியூ-9 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கியது, இப்போது இந்தியா இந்த அமைப்பை முற்றிலுமாக அழித்துவிட்டது. பாகிஸ்தானும் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியது, மேலும் இந்தத் தாக்குதலில் நான்கு பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்ததாக கர்னல்
சோபியா குரேஷி விளக்கினார்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
பஹல்காமில் நடந்த தாக்குதல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, ​​டிஆர்எஃப் தாக்குதலின் பங்கை பாகிஸ்தான் மறுத்ததாக அவர் கூறினார்.இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் உடல்கள் இறுதிச் சடங்குகளின் போது அவர்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் புகைப்படங்களை அவர் காண்பித்தார். இறுதிச் சடங்கு நிகழ்வில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி இருந்தான். இது எதைக் குறிக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்