
புதுடெல்லி, ஜூலை 1- இந்தியாவில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தை நிலவரம், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நாணய மாற்று விகிதங்கள் போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இத்தகைய சர்வதேச காரணிகளால் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. உலகளாவிய அளவில் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகத் தேர்வு செய்வதும், அமெரிக்க டாலரின் நிலைமாற்றங்கள் மற்றும் மத்திய வங்கிகளின் கொள்கை முடிவுகளும் இந்த உயர்வுக்கு காரணமாக இருக்கின்றன. இந்நிலையில், இந்தாண்டின் ஜூலை-செப்டம்பர் இடையே தங்கத்தின் விலை $3,100 முதல் $3,500 வரை மாறாமல் இருக்கும் என சிட்டி வங்கியின் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் கூறுகையில், ஏற்கனவே ஏப்ரல் மாத இறுதியில் $3,500 என்ற உச்ச விலை பதிவான நிலையில், அது தற்போது தங்க சந்தையின் உச்ச நிலையாக இருக்கக்கூடும் என்றும், சந்தையில் தங்கத்தின் பற்றாக்குறை குறைந்து வருவதால் விலை உயர்வு அல்லது இறக்கம் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மே 29ஆம் தேதி தங்கம் விலை குறைந்த விலையை எட்டிய பிறகு, அதன் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. தற்போது, ஸ்பாட் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $3,293.55 ஆகி, 0.6% உயர்வு கண்டுள்ளது. மேலும், தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக தங்கத்தின் விலை உயரும் நிலையில் உள்ளது. இந்த காலாண்டில் மட்டும் 5.5% உயர்வை தங்கம் பெற்றுள்ளது. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தரவுகளின்படி, அமெரிக்க தங்க எதிர்கால ஒப்பந்தங்களின் விலை 0.6% உயர்ந்து $3,307.70 ஆக சரிந்துள்ளது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் மற்றும் நகை வணிகர்கள், இந்த விலை மாற்றங்களை கவனத்தில் கொண்டு செயல்படுவது அவசியமாகிறது. இதற்கிடையே, திங்கட்கிழமை தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது. இதற்கு பலவீனமான அமெரிக்க டாலர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. முதலீட்டாளர்கள், இந்த வார இறுதியில் வெளியாகவுள்ள அமெரிக்க பொருளாதார தரவுகளுக்காக காத்திருக்கின்றனர். இதுகுறித்து ஜானர் மெட்டல்ஸின் துணைத் தலைவர் மற்றும் மூத்த உலோக மூலோபாயவாதி பீட்டர் கிராண்ட் கூறுகையில், “இன்று அமெரிக்க டாலரின் பலவீனம், தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. இருப்பினும், மே மாத நடுப்பகுதியில் இருந்து தங்கம் உயர்வு அல்லது சரிவோ இல்லாமல் தொடர்ந்து நிலைத்திருக்கிறது” எனக் கூறினார். இந்த நிலை, தங்க சந்தையில் உறுதியற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது. முதலீட்டாளர்கள், புதிய பொருளாதார தகவல்கள் வெளிவரும் வரை பாதுகாப்பான முதலீடு விருப்பமாக தங்கத்தை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு: அமெரிக்க அரசாங்கத்தின் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதோடும், முக்கிய வர்த்தக கூட்டாளர்களுடன்